இடுகைகள்

நவம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாயபு வீட்டு சரித்திரம் - 28

படம்
சாயபு வீட்டு சரித்திரம் - 28 Posted: 28 Nov 2009 10:50 AM PST "அக்கா...நான் அநாதை ஆயிட்டேனே அக்கா...எனக்கு இனி யாரிருக்கா? யார் என்னை பார்த்துக்குவாங்க இனிமேல்?" ராசிதா கசிந்துருகி அழுதது காணமுடியவில்லை. கேன்சர் முற்றிய நிலையில் இருந்த தஸ்தகீர் ஆஸ்பத்திரியில் நாலு நாள் இருப்பதும், வீட்டுக்கு வருவதுமாக அல்லாடிய பின், நிரந்தரமாக ஓய்வு கொள்ள, தந்தை வழி சொந்தம் யாரும் ராசிதாவை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை! கடைசி நேரத்தில் தஸ்தகீர் என்ன நினைத்திருப்பாரோ? கச்சாமாவை தான் தவிக்க விட்டதற்கு பிணையாக, இன்று ராசிதா தனிமரமாக நிற்கிறாளே என்று மனதார வருந்தியிருப்பாரா?! பொறுமையின் சிகரமான கச்சாமாவை தனது சொல்லாலும் செயலாலும் நோவினை செய்ததற்கு, இன்று உடலாலும் மனதாலும் தாங்க முடியாத வேதனையை இறைவன் தந்துவிட்டான் என்று உணர்ந்திருப்பாரா?? கச்சாமாவின் மூன்று பெண்மக்களும் இன்று குடியும் குடித்தனமுமாக இருக்க, சின்னம்மா மக ராசிதா மட்டும் அநாதையாக நிற்கிறாள். "ராசிதா...நீ எங்கூட எங்க வீட்டுக்கு வா... மற்றதை அப்புறம் பார்க்கலாம்!" தகப்பனின் காரியங்கள் முடிந்ததும், மர்ஜியா அவளை தன்...

ஆடு வாங்கிய கதை

படம்
ஆடு வாங்கிய கதை Posted: 26 Nov 2009 10:28 AM PST போன வருடம் இதே நேரம் ஹஜ்ஜில் இருந்தோம். இன்று அந்த பசுமையான நினைவுகளை நினைக்கையில் கண்களில் நீர் துளிர்க்கிறது. அரஃபா மைதானத்தில் அகமகிழ்ந்திருந்த நாழிகைகள், மனக்கண்ணில் நிழலாடுகிறது! பக்ரீத்துக்கு ஆடு அறுக்கலாமா, கூட்டு குர்பானி சேரலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது, இது பற்றி காலேஜில் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடன் படிக்கும் மாணவி தீபா தாங்கள் செம்மறி ஆடு வளர்ப்பதாகவும், வேண்டுமானால் பக்ரீத்துக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். இது அவர் சொல்லி பதினைந்து நாட்கள் இருக்கும். நான் அசால்ட்டாக விட்டு விட்டேன். கூட்டு குர்பானியும் சேர்ந்து விட்டோம். 2 நாட்கள் முன்பு என்னவர் ஆடு அறுக்கலாம் என்று சொல்ல, தீபாவுக்கு போன் செய்தேன், "தீபா...செம்மறி குட்டி இருக்கா? எனக்கு ஒரு ஆடு வேணும்ப்பா" "5 குட்டி இருக்குங்க்கா...வந்து பிடிச்சுக்குங்க..." "என்ன விலைப்பா? எத்துணை கிலோ தேறும்?" "4000 ருவாய்னு எங்க வீட்டுக்காரர் சொன்னார், வேணா குறைச்சுக்குவார், சுமாரா 15 கிலோ கறி தேறுமாம்...நாள...

குழந்தை பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே...

படம்
குழந்தை பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே... Posted: 23 Nov 2009 05:44 AM PST கண்மணியே கண்மணியே உன்னைத்தானே கொஞ்சிடுவோம் விளையாட ஓடி வா நீ! (கண்மணியே) மஞ்ச பூமேனியே அன்பு லாஃபுகண்ணே உன்னை அன்போடு அணைத்து கொள்வோம்! (கண்மணியே) இது இசையல்ல வரும் பாட்டல்ல, இது என்றென்றும் உன்வாழ்வில் இருக்கட்டும்! கருவிழியாலே உன் மொழியாலே சில நேரங்கள் சட்டென்று மகிழ்வூட்டும்! பெண்ணே... கண்ணே... பூமேனி தன்னோடு தாங்கி வரும் பெண்ணே பொன்மாலை பூக்கூட உன்னை வாழ்த்தும் கண்ணே உன் குறும்பின் அழகில் எல்லைகளேது எந்நாளும் சிரிப்புண்டு! (கண்மணியே) இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு பிஞ்சுக்கை நெஞ்சோடு தீண்டிட வந்தவள் யாரு உனைக் கொஞ்சி கொஞ்சி உன்னழகை வியக்கிறேன் இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு? பெண்ணே... கண்ணே... பூமாரி உன்மீது என்றும் பொழிய வேண்டும் ஊரார்கள் உனைவாழ்த்தும் அழகை ரசிக்க வேண்டும்! அட வசந்தம் வீசிட வேண்டுமே நல் தென்றல் காற்றோடு! (கண்மணியே) -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே) இந்த பூலோக...

என்ன தான் நடக்குது காலேஜ்ல???

படம்
என்ன தான் நடக்குது காலேஜ்ல??? அரபு சீமையிலே... - 11 மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல... என்ன தான் நடக்குது காலேஜ்ல??? Posted: 20 Nov 2009 06:16 AM PST காலேஜ் அப்டேட்ஸ் எல்லாம் கொடுத்து ரொம்ப நாட்களாகி விட்டது. எங்க க்ளாஸில் ரெகுலராக வருபவர்கள் மொத்தம் 70 பேர். நான் முதல் பெஞ்ச்! காலேஜில் கேண்டீன் கிடையாது. கண்டிப்பாக லன்ச் கொண்டு போக வேண்டும். எதாவது ஒரு நாள் என்றால், பணம் கொடுத்து ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம். லேடீஸ் காலேஜ் என்றாலும், லெக்சரர்ஸ் ஜென்ஸும் இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் சின்ன பசங்க. மேடமும் கூட நிறைய பேர் யூத் தான். காலையில், வீட்டில் இருந்து 8.45க்கு கிளம்பினால், 9.25க்கு காலேஜ் போய் சேர்வேன். 17 கி.மீ. 9.45க்கு பெல்! லஞ்ச் டைம் 1.10 முதல் 1.50 வரை! மாலை 4.50க்கு காலேஜ் முடியும். நான் ஸ்பெஷல் பர்மிஷனில் 3.30 மணிக்கே கிளம்பி விடுவேன். ஒரு பத்து பேர் மட்டும் என்னுடைய வயதுக்காரர்கள். மீதி எல்லாரும் 21-25 வயதுக்குட்பட்ட ஜூனியர்ஸ். சோ எல்லாரும் என்னை அக்கா என்று தான் கூப்பிடுவார்கள். லெக்சரர்ஸ் கூட, என்னை 'மேடம்', 'மேடம்' எ...

சாயபு வீட்டு சரித்திரம் - 27

படம்
சாயபு வீட்டு சரித்திரம் - 27 கவி தோன்றும் நேரம் Dawn - அதிகாலை சாயபு வீட்டு சரித்திரம் - 27 Posted: 19 Nov 2009 04:59 AM PST பாஜி தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டே இருந்தாள். தூக்கம் வராமல் போனதற்கு பலப்பல காரணங்கள். பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு விட்டு டவுனுக்கு குடியேறி விட்டனர். டவுனில் குடியேறியது நவீன கால தார்சு வீடாக இருந்தாலும், என்னமோ பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறியது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஞாபகங்களை சுமந்து நின்ற திண்ணையும், எண்ணக்குவியலோடு வண்ணக்கோலமிட்ட வாசலும், ஆயிரமாயிரம் விளையாட்டுக்களை கண்டு ரசித்த கூடமும், மன ஆழத்தின் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்த கொட்டறையும், ஏக்கங்களையும் தாபங்களையும் கண்டு எள்ளி நகையாடிய உள்ளறையும், அவள் வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தன. தூக்கம் பிடிக்காமல் போக இன்னொரு முக்கிய காரணம் கமால். அழிச்சாட்டியமாக மனதில் வந்து அமர்ந்து, அவள் தனிமையோடு விளையாடிக் கொண்டிருந்தான். திருமணத்துக்கு இன்னமும் பதினைந்து நாட்கள் தான் இருந்தன. ஆனால், காதல் கொண்ட மனதுக்கு அது பதினைந்து யுகமாக தோன்றி, தூக்கத்தைத் தொலைக்க வைத்தது. அந்தகார இ...

சின்ன சின்னதாய் "16"

http://tamilbayan.blogspot.com/ சின்ன சின்னதாய் "16" பசிக்கும்போது உண்ணா விட்டால்... நீ உண்ணும்போது உனக்கு பசிக்காது..!! ****************** சான்றோர் புத்திமதி கேளான்.. சறுக்கியதும் தானும் புத்திமதி சொல்ல தொடங்குவான்..?? ****************** போதைக்கு... ஒரு கோப்பை மது போதும்... தெளிவதற்கோ..? ****************** நீந்த கற்றுகொண்டால்.... இரும்பும் கூட நீரில் மிதக்கும்..!! ****************** பலமணிநேர சிந்தனவாதியின் வெற்றி.. நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!! ****************** நிலைப்பதாய் இருந்தால் நேசி... கிடைக்கும் என்றால் முயற்சி செய்..!! ****************** 'குப்பையை' பேசி.. கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?! கோபுரத்தை கனவு கண்டு.. குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..! ****************** எது சலிக்காமல் கிடைக்கிறதோ... அது விரைவில் சலித்து விடும்...!!? ****************** எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...? என் பேனா மையும்.... உன்னை பற்றிய கவிதைகளும்...!! ****************** கொண்ட...

நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா?

படம்
  நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா? Posted: 16 Nov 2009 06:31 AM PST என் மகள் லாஃபிராவுக்கு ஆறு வயதில் காது குத்தியதற்காக வைத்த நலங்கு வைபோகத்துக்கு எழுதிய பாடல். அன்பு லாஃபிரா திருநாளோ தந்தை தாய் கொஞ்சும் புது நாளோ எங்க பூந்தோட்ட மலர் தானோ தங்க தேனூற்றாய் இனிப்பாளோ நலங்கெனும் சடங்கில் தன்னை மறப்பாளோ மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ பிஞ்சு விரல் கொலுசொலி கேட்கிறதே! (அன்பு லாஃபிரா) பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் ஊட்டினாள் வாழும் வாழ்வில் அர்த்தம் கூட்டினாள் இரவும் பகலும் கவி பாடினாள் இதயம் மகிழ மலர் சூடினாள் நாய கத்தின் வழி நாடினாள் நீ கேட்ட நலங்கின்று பொன்மானே! நீ தூங்க மடி ஒன்று தருவேனே!! சொந்தங்கள் உனைச் சுற்றி வாழ்த்தாதோ?! பந்தங்கள் ராகங்கள் பாடாதோ!! அல்லாஹ்வின் அருள் சேருமே!! (அன்பு லாஃபிரா) புதிய மலர்கள் அவள் கூந்தலில், குறும்பு தெரியும் அவள் பார்வையில் தேனின் துளி அவள் பாதையில் கனவு நிறைந்திருக்கும் கண்களில் இதயம் மகிழ்வு கொள்ளும் ஆசையில் பாசம் பொங்கும் அவள் வார்த்தையில் மம்மியின் மனம் போல இருக்கின்றா...

நாகப்பட்டினமே

படம்
நாகப்பட்டினமே Posted: 06 Nov 2009 08:57 PM PST நாகப்பட்டினம் என்ற ஊர் பெயர் வரும்படி சினிமாப்பாடல் இருக்கா என்று நண்பரொருவர் கேட்க, அப்படி இல்லையென்று இதோ ஒன்றை நானே உருவாக்கினேன். அவரவருக்கு விருப்பமான மெட்டு போட்டுக் கொள்ளுங்கள். பல்லவி சிப்பியுண்டு முத்துமுண்டு சிந்தையள்ளும் கடலுமுண்டு நாகப்பட்டினமே - எங்க நாகப்பட்டினமே! உப்புமுண்டு மீனும் உண்டு மிதவை ஏற மார்க்கமுண்டு மரத்தை கட்டணுமே - மச்சான் மரத்தை கட்டணுமே!! அட, கட்டுமரத்ததான் கட்டுபுட்டோம் கடலுக்குள்ளே குதிச்சுபுட்டோம் கரையும் தெரியல - பிழைக்கும் வழியும் புரியல... (சிப்பியுண்டு) சரணம் சேர்த்து வெச்ச கஞ்சி தண்ணி, நெத்திலி மீனு கருவாடு சோத்த எல்லாம் தின்னுபுட்டு சோக்கா போன கடலுக்குள்ள, போயி ரெண்டு வாரமாச்சு, பாத்த விழி பூத்து போச்சு கருகமணி பொன்னுனக்கு கைவளவி கொண்டு வாரேன் என்று சொல்லி ஏங்க வெச்சு கடலுக்குள்ள போன மச்சான் ஊழிக்காத்து அடிக்கையிலே ஊனும் உயிரும் நடுங்குதைய்யா நீ பத்திரமா திரும்பிவர பாவி மனசு துடிக்குதைய்யா - இந்த பாவி மனசு துடிக்குதைய்யா! (சிப்பியுண்டு) தலைவாழ இலைபோட்டு, அழகழ...