இடுகைகள்

மார்ச், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொந்த கதை! நொந்த கதை!

படம்
சொந்த கதை! நொந்த கதை! Posted: 16 Mar 2010 08:42 AM PDT நேற்று காலேஜில் என்ன ஆச்சுன்னா..... காலங்காத்தால நல்ல தலைவலி..., முதல் நாள் ராத்திரி கண்ணு முழிச்சுப் படிச்சதுனால வந்த வினையோ என்னவோ, தைலத்தை எடுத்துத் தடவிக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்...! செகண்ட் பீரியட் ஒன்னும் முடியல. எங்க இங்கிலீஷ் சார்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்தேன். சார் வேற டெஸ்ட்னு சொல்லியிருந்தார். டெஸ்ட்ல இருந்து நான் தப்பிக்கிறேன்னு பிள்ளைங்களுக்குப் பொறாமை...! ரொம்ப முடியலைனு சொல்லிட்டு போய் கடைசி பெஞ்சில படுத்திட்டேன். பாவிப் புள்ளைங்க, "சார் சுஹைனாக்கா வேற படுத்திட்டாங்க (மொத்த இங்கிலீஷ் மேஜர் ஸ்டூடண்ட்ஸே 8 பேர் தான்)... அதனால, நாளைக்கு எல்லாரும் ஒன்னா டெஸ்ட் எழுதறோம், இன்னிக்கு நாங்க ரெக்கார்டு எழுதறோம்"னு பர்மிஷன் வாங்கிட்டு எழுதிட்டிருந்தாங்க... சார் போயிட்டார். எல்லாரும், மாற்றி மாற்றி, என்னை எழுப்பி, எதாவது ஒன்னு கேட்டுட்டே இருந்தாங்க... அப்ப, சிந்துன்னு ஒரு பொண்ணு, "அக்கா, உங்க பேனாவுல இருந்து கொஞ்சம் இங்க் ஊத்திக்கிட்டுமா அக்கா?"னு கேட்டா! ...

அரபு சீமையிலே... - 17

படம்
அரபு சீமையிலே... - 17 Posted: 13 Mar 2010 07:37 PM PST அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல் பெருமதிப்பு கொண்டிருந்தனர். அவர்பொருட்டு, தம்முயிரையும் ஆசையுடன் தரத்துடித்தனர். அத்தகைய தோழரொருவர் அர்க்கம்; என்றும் நாடினார் சொர்க்கம்! சபா குன்றின் மேலிருந்த தம் மாளிகையை நபிகளுக்கு செய்தார் தத்தம்! அவர் பதினெட்டு வயது மக்ஜூமி கோத்திரத்தாரே! அதே கோத்திரத்து அபூஜஹலும் தறிகெட்டு மதிகெட்டு ஆத்திரத்தால் கொக்கரித்தானே!! அர்க்கமின் மாளிகையில் சொர்க்கத்தைத் தேடி சர்க்குண மார்க்கத்தின் தொழுகை நடந்தது; இறையை நோக்கி, அழுகை புரிந்தது! தாருஸ்ஸலாம் என்று அது பேரும் பெற்றது! சாந்தி மாளிகையில், சாந்தம் தவழ்ந்தது!! கொக்கரித்த அபூஜஹல், தாருல் நத்வாவில் கூடினான்! கட்டிளங்காளையர் பலரைக் கூட்டினான்! நபிகளுக்கு எதிராக ஒரு வேள்வியை மூட்டினான்!! விலை வைத்தான் நபிகள் தலைக்கு! உலை வைத்தான் முஸ்லிம்கள் நிம்மதிக்கு!! நூறு ஒட்டகை தருவேனென்று தத்தம் செய்தான். பேரும் புகழும் தமக்கே என்று சத்தம் செய்தான். உமர் இப்னு கத்தாப் என்னும் முப்பத்திமூன்று வயது இளவல் ஒருவர் அப்பக்கம...

பாடி வாழ்க்கை - 5

படம்
பாடி வாழ்க்கை - 5 Posted: 10 Mar 2010 12:31 AM PST ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் முடியும் தருவாயில் ஏனோ ஒரு வித சோகம் மனதைக் கவ்விக் கொள்கிறது. எனக்குக் காலில் வலி வேறு...! ஆனாலும் எப்படியும் போயே தீர்வது என்று, கேம்ப் கடைசி நாளன்று, பெயின் கில்லர் எடுத்துக் கொண்டு போய் விட்டேன். காலையில், மனவளக்கலை புரபசர், திரு.பரமசிவன் ஐயா அவர்கள் வந்திருந்தார்கள். அவருடன் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றி கலந்துரையாடல் நடந்தது. சீஃப் கெஸ்ட்டாக, திரு.ரங்கசாமி ஐயா அவர்களும், திரு.சுவாமிநாதன் ஐயா அவர்களும் பங்கேற்றனர். இடையில் தேநீர் மற்றும் உளுந்து வடை தரப்பட்டது. மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் தயிர் பச்சடி, தயிர் சாதம் வழங்கப்பட்டது. மதியம் நடனப் போட்டி மற்றும் கல்சுரல்ஸ்! நடனப்போட்டியில் பங்கேற்றோர்: காலேஜ் சேர்மன் அவர்கள் தனது மகளுடன் வந்திருந்து பரிசுகள் விநியோகித்தார்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. எனக்குக் கிடைத்த பரிசுகள் விபரம்: முதல் பரிசு 1.பேச்சுப் போட்டி 2.உடனடிப் பேச்சு இரண்டாம் பரிசு 3.மிமிக்ரி 4.கண்ணைக் கட்டி வால் வரைதல் 5...

பாடி வாழ்க்கை - 4

படம்
பாடி வாழ்க்கை - 4 Posted: 07 Mar 2010 08:13 PM PST மூன்று நாட்கள் முழுவதுமாகப் போனதே தெரியவில்லை...! நான்காம் நாள் காலேஜ் கேம்ப்பில் காலை, திருமதி.ஷம்ஷாத் பேகம் மேடம் துவங்கி வைக்க, அன்று ஹாஸ்பிடல் விசிட் ப்ளான் செய்திருந்தார்கள். எல்லாரும் காலேஜ் பஸ்ஸில் ஏறி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இருந்த மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சென்றோம். 5 நிமிட தூரம் தான் என்றாலும், அதற்குள் பஸ்ஸில் ஆட்டம் பாட்டம் ஆரம்பமாகி விட்டது. அங்கு, ஹாஸ்பிடல் இன் பேஷண்ட்ஸுக்குக் கொடுக்க, பழங்களும், பிரட் பாக்கிட்களும், காலேஜ் சார்பாக எடுத்துக் கொண்டோம். ஆனா, பாருங்க, ஒரு இன் பேஷண்ட் கூட அன்று இல்லை. நாங்க வருவோம்னு பயந்து போய், எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டாங்க போலிருக்குது:) அங்கு தலைமை டாக்டர் ரமணி அவர்கள் சிறிது நேரம் உரையாற்ற, பிறகு இரண்டு பெண் மருத்துவர்கள், எங்கள் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்கள். அடுத்ததாக, அங்கிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரம் வரை எய்ட்ஸ் ஒழிப்புப் பேரணி போனோம். கையில் சின்னச் சின்னதாக பேனர் ரெடி பண்ணி எடுத்து வந்திருந்தார்கள். ஆட்களே இல்லாத இடத்தில், 'நிலா' வ...

பாடி வாழ்க்கை - 3

படம்
பாடி வாழ்க்கை - 3 Posted: 07 Mar 2010 05:05 AM PST ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் இனிதே தொடங்கியது....! உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட, மாணவிகளின் முகத்தில், மகிழ்ச்சி நிறைந்திருந்தது...! காலையில் சீஃப் கெஸ்ட்டாக, அல் அமீன் பாலிடெக்னிக் காலேஜ் முதல்வர், திரு.ஜே.கமால் பாட்சா அவர்கள் உரையாற்ற, அதன் பின், முதலுதவி சிகிச்சை குறித்து, எங்களுக்கு, செயிண்ட்.ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேஷனைச் சேர்ந்த, திருமதி.எஸ்.விஜயகுமாரி மற்றும், குமாரி.எம்.தாரணி ஆகியோர் சிறந்த முறையில் விளக்கமளித்தனர். இடையில் வாழக்காய் பஜ்ஜியும் காஃபியும் தரப்பட்டது. மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், பொரியலுடன் ஜிலேபியும் தரப்பட்டது. என்ன சாப்பிட்டோம் என்பது முக்கியமாகத் தெரியவில்லை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, ஒரே குடும்பமாகச் சாப்பிட்டது தான் பிரமாதம்! அதன் பிறகு, போட்டிகள் தொடங்கின! முதல் போட்டி, நெருப்பின்றி சமையல்! அதாவது, அடுப்பில் வைக்காமல், ரெடிமேடாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உருவாக்க வேண்டும். எங்கள் குழுவில், பிரட் கட்லெட், மிக்ஸட் நட்ஸ் மற்றும், பேரிச்சை அல்வா ஆகியன செய்திருந்தோம். பி...

பாடி வாழ்க்கை - 2

படம்
பாடி வாழ்க்கை - 2 Posted: 02 Mar 2010 09:02 AM PST முதல் நாள் கேம்ப்பை விட இரண்டாம் நாள் கேம்ப் சூப்பர்! வழக்கமானபடி, சீஃப் கெஸ்ட்டெல்லாம் வந்து நிறைய்ய்ய பேசினார்கள்! திரு.செந்தில் என்பவர் உலக வெப்பமயமாதல் பற்றி பேசினார். இன்னொருவர் (பெயர் மறந்து போச்சு!) மரம் நடுவது பற்றி, பசுமை உலகம் பற்றியெல்லாம் பேசினார்! இறுதியில், எங்களிடம் இருந்து கருத்து கேட்டார்கள். நான் இவ்வாறு சொன்னேன், "ஐயா, காற்றில் பறக்கும் விதைகள் பல திசைகளுக்கும் பறக்கின்றன. அதில் சில உழவுக் காட்டில் விழுகின்றன. சில, மொட்டைப் பாறையின் மேல்! காட்டில் விழுந்த விதைகள் விருட்சமாகின்றன....! பாறையில் விழுந்த விதைகள் பட்டுப் போகின்றன. ஆக, குறை விதையின் மேல் அல்ல, அது விழுந்த இடத்தில் தான்....! இப்போ, நீங்கள் ஒரு விதை போட்டிருக்கிறீர்கள், எம்முடைய மனதில்! அது விருட்சமாவதும், வீணாவதும் எம் கையில் தான் இருக்கிறது. நாங்கள், உழவுக்காடாக இருக்கவே விரும்புகிறோம்!" நான் சொன்னதும், பலத்த கரகோஷம்....! சந்தோஷமாக இருந்தது! இடையில், பருப்பு வடை மற்றும் டீ! இன்று சப்ளை எங்க குரூப் (லில்லி குரூப்) பொறுப்பு என்பதால், என...