உங்க போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? இதை ட்ரை பண்ணுங்க!
உங்க போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? இதை ட்ரை பண்ணுங்க!
தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மிகவும் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வாங்கிய போது சூப்பராக செயல்பட்ட ஸ்மார்ட் போன், சில நாட்கள் கழித்த பிறகு ஹாங் ஆகி பயன்படுத்துபவரின் பொறுமையை சோதிக்க ஆரம்பித்துவிடும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் பலரும் தவிப்பர். ஆனால் சில வழிமுறைகளை பின்பற்றினால் பிரச்சனை சரியாகி விடும்.
ஆன்டிராய்டு போன் ஹாங் ஆகுதா?
1. முதலில் உங்கள் போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
2. பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்.
3. பவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள். 4. உங்களால் போனை ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்.
5. உங்கள் போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள்.
6. போன் அடிக்கடி ஹாங் ஆனால் பேக்ட்ரி ரீசெட் கொடுங்கள். இது உங்கள் போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும் ஆனால் இதை மேற்கொண்டவுடன் உங்கள் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் அழிந்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஐபோனும் ஹாங் ஆகுதா?
ஆன்டிராய்டு போன் ஹாங் ஆவது போல் ஐபோனும் அடிக்கடி ஹாங் ஆகி பிரச்சனை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்.
1. ஆன்டிராய்டு போன்களை போலவே உங்க ஐபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
2. நீங்கள் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை டெலீட் செய்துவிடுங்கள், போதுமான மெமரி இல்லாததாலும் போன் ஹாங் ஆகலாம்.
3. பிரச்சனை இன்னும் சரியாகாத நிலையில் ஐட்யூன்ஸ் மூலம் போனை ரீஸ்டோர் செய்யுங்கள்.
கருத்துகள்