மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்!

மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்!

Those who have attained the age of maturity is the painful joint pain. If the food is mixed with toxic in nature, caused by the inability to produce consumed.



வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. தற்போது நச்சு கலந்த உணவு வகைகளால், இயற்கையில் விளையும் பொருளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. இயற்கையான சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலியை குணமாக்க முடியும். எலும்புகள் இணையும் பகுதிகளில் உழலும் தன்மை எளிதாக இருக்க எண்ணெய் பசை தேவை. இந்த எண்ணெய் “ஸ்லேஷக கபம்‘ என்ற திரவமாகும்.

எண்ணெய் பசை குறைந்து போனால், எலும்புகள் எளிதாக உராய முடியாது. அதனால், மூட்டு இயக்கம் தடைபடுவதோடு, வெப்பம் ஏற்படும். இந்த உராய்வினாலும், வெப்பத்தினாலும் வலி ஏற்படுகிறது. மூட்டு வலியின் தொடர்ச்சியாக உடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. இது தொடர்ந்து நீடிக்கும்போது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்த மூட்டுவலி பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம். எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம். அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, ஹார்மோன் கோளாறுகளாலோ ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும். மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும்.

உடல் எடை அதிகரித்தாலும் மூட்டுவலி சீக்கிரமாக வரலாம். நடக்கும்போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும்.மேலும் சில காரணங்கள்கால் முட்டியை அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுத்துவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது. எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள். முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது. மூட்டுகளில் நோய் தொற்றுவது. மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகளால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். இடுப்பிலிருந்து முட்டி பகுதிக்கு செல்லும் கயிறு போன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.  எலும்பு மூட்டு தசையில் ரத்தம் உறைதல். முடக்கு வாதம் என்னும் வாத ரத்தம் தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கமும், வலியும் அதிகமாக தெரியும். இது வாத நோயில் ஒரு வகையாகும்.

குளிரான சூழ்நிலையில் அதிக வலி தெரியும். கைமூட்டுகள், 2 கால் மூட்டும் பாதிக்கப்படுகிறது. இந்த நோய் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரலாம். பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் வரலாம். மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்களையும் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகளால் பிற்காலங்களிலும் ஏற்படலாம். குழந்தைகளுக்கு காசநோய், பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் அம்மை நோய்கள் காரணமாக மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது 6 வாரத்திலிருந்து 3 மாதம் வரை இருக்கலாம். 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் ஸ்ட்ரெப்ட்டோ காக்கஸ் பாக்டீரியாவினால் தொண்டை அலர்ஜி ஏற்பட்டு ருமாட்டிக் ஜூரத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனையும், ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது முக்கியமானது. தொற்று நோய் கிருமிகளாலும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

வலியைக் குறைக்ககால் முட்டியினை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். முட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடிக்க வேண்டும் மற்றும் மோர் குடிக்க வேண்டும். இது கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.சாப்பிடக்கூடியவை வாழைப்பழம், காய்கறி சூப் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

மேலும் கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம். கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிடலாம்.  பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவை நாளடைவில் குணமாகும். ஆலிவ் எண்ணெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை மூட்டுகளில் உள்ள பிரச்னையை சரி செய்யும். க்ரீன் டீயில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி நிவாரணி.

தவிர்க்க வேண்டியவை 

* பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* சமையல் எண்ணெய்களான சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய்யை தவிர்க்கவேண்டும்.
* கடல் சிப்பிகளில் ப்யூரின் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாகி, மூட்டுகளில் வலியும் அதிகமாகும்.
* சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதோடு, மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.
* யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்கவேண்டும்.
* காரம், வறுத்த உணவுகள், டீ, காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* காய்கறிகளில் கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கை வைத்தியம்
* ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை சிறிது தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
* வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு  முட்டியில் நன்கு தேய்த்து வர வலி குறையும்.
* விளக்கெண்ணையை சூடேற்றி சிறிது ஆரஞ்சு சாற்றை விட்டு காலை உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு சாப்பிடும்போது காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
* ஒரு மேஜைக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!