சர்வரோக நிவாரணி உலர் திராட்சை!

சர்வரோக நிவாரணி உலர் திராட்சை!

Now one of the fruits of the grape. The black grapes, green grapes, grape paneer, Kashmir grapes, Angoor grapes, grape Kabul,


இனிக்கும் பழங்களில் ஒன்று திராட்சை. இதில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசு பழம் என்பார்கள். யுனானி வைத்தியத்தில் இந்த கிசுமுசு பழம் சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்பு சத்தும் அதிகம் நிறைந்து உள்ளது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்த பழம் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழமிது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். திராட்சையில் கால்சியம், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.

திராட்சை பழத்தை இரவு உணவுக்குப்பின் பத்து பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும், பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் திகழ்வார்கள். ரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, மலச்சிக்கல் தீர, குடற்புண் ஆற, இதயதுடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு இப்பழத்தின் பங்கு கணிசமானது

கர்ப்பிணி பெண்களுக்கு!


கர்ப்பிணி பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்கவைத்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

பெண்களுக்கு!

மாதவிலக்கு காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த வலி நிவாரணியாக உலர்ந்த திராட்சை பெரிதும் பயன்படுகிறது. இந்த பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்துபோகும்.

குடல்புண் ஆற!

அஜீரணகோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சை பழங்களை நீரில் கொதிக்கவைத்து கசாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல்புண்கள் குணமாகும்.

இதயதுடிப்பு சீராக!


சிலருக்கு இதயம் மிகவேகமாக துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவித பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்த பழங்களை போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயதுடிப்பு சீராகும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!