வாய்ப்புண் ஏற்பட காரணங்கள், தடுக்கும் முறைகள்

வாய்ப்புண் ஏற்பட காரணங்கள், தடுக்கும் முறைகள்

Statistics says that one in five people in the world suffering from ulcerative opportunity. Why does stomatitis? The inside of the mouth and



உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம். வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது? வாயின் உட்புறம் மற்றும்  வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத்தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படுவதைத்தான் வாய்ப்புண் என்கிறோம். உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம்  மற்றும் தொண்டைப்பகுதி போன்றவற்றில் வாய்ப்புண் வரலாம். இதில் ஏற்படும் வலி காரணாக பேசவோ உணவு உட்கொள்ளளவோ சிரமமாக  இருக்கும்.

பித்தம் அதிகரித்தால் வாய்ப்புண் வரும் என்கிறது சித்த மருத்துவம். ஜீரணக்கோளாறு உடல் சூடு, மன அழுத்தம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்  சி, பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உயிர்சத்து குறைவு, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, புகை, மதுப்பழக்கம் ஹார்மோன் மாறுபாடு  பற்கள் மற்றும் வாய்சுத்தமின்மை ஹெர்ர்பெஸ் வைரஸ் மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண் 7 முதல் 10நாட்களில்  குணமாகிவிடும். நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண்கள் புற்றுநோயாகவும் மாறிவிடலாம்.

வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?


மலச்சிக்கல் மற்றும் ஜீரணக்கோளாறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும்  பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.  மனஅழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா  பயிற்சிகளை செய்யவேண்டும்.

வாய்ப்புண்ணை எப்படி சரிசெய்யலாம்?

நெல்லி இலைகளை வேகவைத்த நீரில் அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா  சூரணத்தினால் வாய் கொப்பளிக்க புண் ஆறும். இதனை உள்ளுக்கும் சாப்பிடலாம். மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம்  வாயிலே வைத்திருந்து விழுங்கலாம். முற்றின தேங்காயையும் பயன்படுத்தலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல  பலன்கிடைக்கும்.  மாசிக்காயை பாலில் அரைத்து தேனில் குழைத்து தடவலாம்.

பச்சரிசி, பயத்தம் பருப்பு, 1 ஸ்பூன், வெந்தயம், பூண்டு இவற்றை வேகவைத்து வெந்ததும் கெட்டியான தேங்கால் பால் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.  மணத்தக்காளி கீரை, அகத்திக்கீரையை தேங்காய் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் சிறுதுண்டு மஞ்சள்  சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். துளசிஇலையை வாயிலிட்டு வாய்ப்புண் பகுதியில் படும்படிமென்று மென்றதை விழுங்கிவிடவேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் வாய்ப்புண்ணை சரிசெய்யலாம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!