இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்

படம்
நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்                   நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர். தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ் உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.             

ஆடாதொடை செடியின் மருத்துவ குணம்

படம்
ஆடாதொடை செடியின் மருத்துவ குணம்                   ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா என்று கூறப்படுகிறது.ஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் 4 வேளை குடித்து வந்தால், நுரையீரல் ரத்த வாந்தி, கோழை மிகுந்த மூச்சு திணறல், இருமல், ரத்தம் கலந்த கோழை போன்ற வியாதிகள் குணமாகும்.இவற்றை சிறு குழந்தைகளுக்கு 5 சொட்டும், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 10 சொட்டும், பெரியவர்களுக்கு 15 சொட்டும் என அளவாக கொடுத்தால் போதும். ஆடாதொடையின் இலைச்சாற்றை 2 தேக்கரண்டி எடுத்து, அவற்றுடன் 1 டம்ளர் எருமைப் பாலை கலந்து 2 வேளை குடித்து வந்தால் சீதபேதி, ரத்த பேதி போன்றவை குணமாகும். இந்த இலையில் 10 எண்ணிக்கை எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டரா...

வெயில் கால உஷ்ண கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!

படம்
வெயில் கால உஷ்ண கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு! பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறு வகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். காய்ச்சல் குண மாகும் சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசி...

நீரிழிவு நோயை போக்கும் முட்டை

படம்
நீரிழிவு நோயை போக்கும் முட்டை                   மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்தநோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன் மூலம் இந்தநோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரி சமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதயநோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன...

இயற்கை நமக்கு தரும் சத்துக்கள்

படம்
இயற்கை நமக்கு தரும் சத்துக்கள்                   அன்னாசி பழம், பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள், பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரைகளில் ‘வைட்டமின் ஏ’ சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை அளவோடு உட்கொண்டால் மாலைக்கண் நோய் தீரும். சருமம் பொலிவு பெறும். வைட்டமின் பி- வாழைப் பூ, சாம்பல் பூசணி, நாட்டு தக்காளி, முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முட்டைகோஸ், காலிபிளவர், பட்டாணி, கடலை, மாதுளை போன்றவற்றில் ‘வைட்டமின் பி’ சத்துக்கள் நிறைந்து உள்ளன. இவற்றை அளவோடு உண்டால், நமது உடல் வலிமைக்கும் நரம்புகள் ஊட்டத்துக்குள் வலு சேர்க்கும். மேலும் வயிற்றுப் புண், வாய்ப் புண், ரத்தசோகை, கை-கால் செயலிழத்தலை விரைவில் குணமாக்கும். வைட்டமின் சி- எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, நாட்டு தக்காளி, நெல்லிக்காய், ஆரஞ்சு, முட்டைகோஸ், காலிபிளவர், வெள்ளை முள்ளங்கி மற்றும் புளிப்பு சுவை உடைய காய்கள் மற்றும் கீரைகளில் ‘வைட்டமின் சி’ சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் ரத்த சுத்திகரிப்பு செய...

சீரான உடல் நலத்துக்கு தூதுவளை

படம்
சீரான உடல் நலத்துக்கு தூதுவளை                   சிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் வீட்டு தோட்டத்தில் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும். ஐந்து ஆண்டுகள் வரை வளரும் இக்கொடியின் தண்டுகளில் முட்கள் இடைவிடாமல் நிறைந்திருக்கும். சரியான முறையில் தூதுவளை கொடியை வளர்த்தால், அவை அதிக நாட்கள் வரை வளர வாய்ப்பு உள்ளது. தூதுவளையின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இதன் இலையும் பூவும் கோழை சளியை அகற்றவும், நம் உடலைப் பலப்படுத்தவும், வீரிய சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் காய் மற்றும் பழங்கள்நமக்கு பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த தூதுவளை கொடி சிங்கவல்லி, ரத்து நயத்தான், தூதுவேளை, தூதுளம், தூதுளை என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள்- தூதுவளை இலைகளை நிழலில் காயவ...

தாதுவை பெருக்கும் இலுப்பை

படம்
தாதுவை பெருக்கும் இலுப்பை                   ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். இதன் பூவை சேகரித்து வறுத்து சாப்பிடுவது கிராமத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். இதன் பூவிலிருந்து சர்க்கரை எடுக்கலாம். சர்க்கரை அல்லது வெல்லப்பாகில் பூவை வறுத்து சேர்த்து கடலை உருண்டை போன்று செய்து உண்பார்கள். தமிழகமெங்கும் தோப்பு தோப்பாக வளரும். இலுப்பை பெரும் மரவகையை சேர்ந்தது. தமிழகத்தின் பழம் பெரும்கோயில்களின் நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். கிளையின் நுனியில் கொத்து கொத்தான இலைகள் கொண்டது. முட்டை வடிவ கனியின் உள்ளே சதை பற்றுடன் இருக்கும் விதையை, ஓடு போர்த்தி இருக்கும். பார்ப்பதற்கு பிறையின் வடிவத்தை போன்று இருக்கும். இதன் மலர்கள் மணத்துடன் வெள்ளை நிறத்தில் பூக்க கூடியது. இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்தும் மருத்துவ பயன் உடையது. இலுப்பை பூ நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்க கூடியது. காமத்தை அதிகரித்து பசியுண்டாக்கும். இ...

குழந்தையும் முதலுதவியும்

படம்
குழந்தையும் முதலுதவியும்                   வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே! வயிற்றுப்போக்கு: குழந்தைகள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் வயிற்றுப்போக்கு தான் முதலில் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதேனும் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ, செரிமானமின்மையினாலோ வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே அவர்கள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமி...

கரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்

படம்
கரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம் கர்ப்பிணிகளுக்கு உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கும்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உற...

பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?

படம்
பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது? ‘செய்யக் கூடாததைச் செய்தாலும் வாழ்க்கை கெட்டுப் போகும்... செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் வாழ்க்கை கெட்டுப் போகும்’ இது ரஜினி பட பஞ்ச் அல்ல. ‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்’ என்ற குறளின் வாயிலாக வள்ளுவர் தாத்தா நமக்கு சொன்ன வழி! மந்திரிகளைச் சந்திப்பதைவிட மருத்துவர்களை சந்திப்பதற்கு சகல செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு இன்று வந்து சேர்ந்திருக்கிறோம். சாப்பிட வேண்டியதை சாப்பிடாமல், சாப்பிடக் கூடாததை சாப்பிடுகிற தவறான உணவுப்பழக்கத்தால் வந்து சேர்ந்த வினை இது. ‘இ்தை குழந்தைப் பருவத்திலேயே நம்மிடம் தொடங்கி வைக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றன பிஸ்கெட்டுகள்' என்கிறார்கள் நிபுணர்கள். ‘‘விரும்பி சாப்பிடும் அளவு் சுவையானது... சாப்பிட நேரம் இல்லாத வேளைகளில், சாப்பிட முடியாதபோது ஆபத்பாந்தவனாக கை கொடுப்பது என்ற விதங்களில் பிஸ்கெட் சரியானது. இதைத் தவிர பிஸ்கெட்டில் வேறு எந்த நன்மையும் இல்லை. கெடுதல்கள்தான் நிறைய இருக்கின்றன’’ என்கிறார் உணவியல் நிபுணரான ஹேமமாலினி. ‘‘சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்ஃ...

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! ***************************** மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! +++++++++++++++++++++++++++++++ 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது... 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்... 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்... 4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொட...