தாதுவை பெருக்கும் இலுப்பை
தாதுவை பெருக்கும் இலுப்பை
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். இதன் பூவை சேகரித்து வறுத்து சாப்பிடுவது கிராமத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். இதன் பூவிலிருந்து சர்க்கரை எடுக்கலாம். சர்க்கரை அல்லது வெல்லப்பாகில் பூவை வறுத்து சேர்த்து கடலை உருண்டை போன்று செய்து உண்பார்கள்.
தமிழகமெங்கும் தோப்பு தோப்பாக வளரும். இலுப்பை பெரும் மரவகையை சேர்ந்தது. தமிழகத்தின் பழம் பெரும்கோயில்களின் நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். கிளையின் நுனியில் கொத்து கொத்தான இலைகள் கொண்டது. முட்டை வடிவ கனியின் உள்ளே சதை பற்றுடன் இருக்கும் விதையை, ஓடு போர்த்தி இருக்கும். பார்ப்பதற்கு பிறையின் வடிவத்தை போன்று இருக்கும். இதன் மலர்கள் மணத்துடன் வெள்ளை நிறத்தில் பூக்க கூடியது.
இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்தும் மருத்துவ பயன் உடையது. இலுப்பை பூ நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்க கூடியது. காமத்தை அதிகரித்து பசியுண்டாக்கும். இதன் விதை நோய்களை நீக்கி உடலை தேற்றும். நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். இலுப்பை இலையை பெண்கள் மார்பகத்தில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு மிகும். இலுப்பை பூ 50 கிராம் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி வடிகட்டிக் காலையில் மட்டும் ஓரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மது மேகம் குணமாகும்.
இலுப்பை இலையை பெண்கள் மார்பகத்தில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு மிகும். இலுப்பை பூ 50 கிராம் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி வடிகட்டிக் காலையில் மட்டும் ஓரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும். பூவை குடிநீராக்கி காலை மாலை 30 மிலி அளவில் கொடுக்க தொடர் இருமல் தீரும். அடங்காத தண்ணீர் தாகம் அடங்கும். விரை வீக்கம் உள்ளவர்கள் பிண்ணாக்கை அரைத்து குழப்பி களியாக கிண்டி இளஞ்சூட்டில் 4 அல்லது 5 முறைகட்டிவர வீக்கம் வடியும் 10 கிராம் பூவை 200 மிலி பாலில் போட்டு காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும்.
காய்ச்சல், தாகம் குறையும். காய்ந்த பூக்களை வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் ஒற்றமிட அந்த இடங்களில் வேர்வை பெருகி வீக்கம் வடியும். இலுப்பை மரப்பட்டை 50 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி காலை மாலை சாப்பிட்டு வர மேக வாயு கண்டிக்கும். மது மேகம் தீரும். பட்டையை குடிநீர் செய்து அதை ஆறாத புண்கள் சொறிகளை கழுவ பயன்படுத்தினால் அவை ஆறும். பச்சை பட்டையை எடுத்து அதனுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடம்பில் தடவி வைத்திருந்து குளிக்க சொறி சிரங் குகள் ஆறும்.
இதன் விதையில் இருந்து எடுக்கப்படும் நெய் இலுப்பை எண்ணெய் என அழைக்கப்படும். இதைக் கொண்டு விளக்கு எரிப்பதால் கண்கள் பிரகாசமடையும். அறிவுத் தெளிவு ஏற்படும். இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி , நரம்பு தளர்ச்சி முதலியவை தீரும். 10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டு அரைத்து 50 மிலி தண்ணீரில் கலக்கி நஞ்சு சாப்பிட்டவர்க்கு கொடுக்க வாந்தியுண்டாகும் நஞ்சு வெளியாகும்.
பிண்ணாக்கை சுட்டு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூச கரப்பான், புண் ஆறும். இதை நெருப்பிலிட்டு சாம்பிராணி போன்று புகை போட வீட்டில் உள்ள புழு பூச்சிகள், எலிகள் உட்பட நச்சு பூச்சிகள் அனைத்தும் வீட்டை விட்டு ஓடி விடும். பிண்ணாக்கு, வேப்பம்பட்டை , பூவரசம்பட்டை, சம அளவு கருக்கி அதே அளவு கார்போக அரிசியும், மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்கு காணும் மண்டைக்கரப்பான், சொறிசிரங்கு, ஆகியவற்றுக்கு தடவ அவை குணமாகும்.
பிண்ணாக்கை பொடித்து மூக்கிலிட நீர் பாய்ந்துதும் மலுண்டாகும். இதனால் மூச்சுகுழாயில் உள்ள நீர் வடியும். இலுப்பையின் வேரை குடிநீர் செய்து வயிற்று கடுப்பு, ரத்த கழிச்சல், பசியின்மை, சுவையின்மை, நீட் வேட்கை, உடல் அயர்வு போன்றவற்றுக்கு 5 மிலி வீதம் காலை வேளையில் குடிக்க இவைகளை நீக்கும். என்கின்றார் அகத்தியர். கோயிலின் இருப்பை தோப்பில் விதைகளை சேகரித்து விற்பது. பூக்கும் காலங்களில் பூக்களை தின்பது என்றிடாமல் இலுப்பையும் ஒரு மூலிகைதான் என்பதை அறிந்து கொள்வோம்.
அதை பயன்படுத்தும் முறையை நமது முன்னோர்கள் ஆய்ந்து சொன்ன வகையில் முறையாக பயன்படுத்தி நோய்நீங்கி நலமுடன் வாழ்வோம். இலுப்பை மரங்களை கோயில்களில் வளர்பதற்கு காரணங்கள் உண்டு. இதன் எண்ணெய் நீண்ட நேரம் எரிந்து வெளிச்சத்தை கொடுக்க கூடியது. விளக்கு எரியும் காலங்களில் ஏற்படும் புகையால் வீட்டில் நஞ்சு உள்ள சிறு பூச்சிகள் ஓடிவிடும். மனம் அமைதியடையும். ஈரத்தன்மையுடன் இருக்கும் போது மென்மையா இருக்கும் இந்த மரம் காய்ந்த பிறகு இரும்பை போன்று வலிமையானதாக மாறிவிடும் என்பதால் இந்த மரத்தின் பாகங்களிலிருந்து தான் கோயில் தேரின் அச்சு உட்பட முக்கியமான பாகங்களை உருவாக்குவார்கள்.

கருத்துகள்