குழந்தையும் முதலுதவியும்

குழந்தையும் முதலுதவியும்


                  வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே!

வயிற்றுப்போக்கு: குழந்தைகள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் வயிற்றுப்போக்கு தான் முதலில் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதேனும் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ, செரிமானமின்மையினாலோ வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே அவர்கள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமிகளை அழித்து வெளியேற்றி, வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும். ஆனால் அதுவே நிற்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

காய்ச்சல்: சில குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் அதிக குளிர்ச்சி, தொற்றுநோய் அல்லது அதிகமான கிருமிகள் உடலில் இருப்பதால் ஏற்படும். நிறைய பெற்றோர்கள் சில நேரத்தில் காய்ச்சல் வந்தால், வீட்டில் இருக்கும் காய்ச்சலுக்கான மாத்திரைகளை கொடுத்து சாதாரணமாக விடுகின்றனர். அவ்வாறு விட்டால், அந்த கிருமிகள் உடலில் அதிகம் இருந்து, பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ஜலதோஷம்: குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால் கூட குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும். சில நேரங்களில் அதில் உள்ள தொற்றுநோய்களால் மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை அப்படியே நீடித்தால், குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் போது அடிக்கடி மாற்ற வேண்டும்.

வயிற்று பிரச்சனை: குழந்தைகளின் சுட்டித்தனத்தால் அவர்கள் அதிகமான வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். அதாவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், செரிமானமின்மை போன்றவை அதிகம் வரும். ஏனெனில் குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அதனால் அதில் இருக்கும் கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வாறு வயிற்று பிரச்சனை இருக்கும் போது, லேசான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

அரிப்புகள்: டயபரை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அதில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் அதிகமான அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சரும நோய் ஏற்படுகிறது. ஆகவே எப்போதும் குழந்தைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்கூறிய நோய்கள் எல்லாம் வந்தால், சாதாரணமாக நினைக்க வேண்டாம். மேலும் இத்தகைய பொதுவான நோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.
            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!