குழந்தைகளை வீரமாக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளை வீரமாக வளர்ப்பது எப்படி?
என் உயிரினும் மேலான நண்பர்களே .....!
ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கு ஒரு வாரிசுவேண்டும் என்றும் அது வளர்ந்து பெரிய ஆளாகி எதிர்கா...லத்தில் தமக்கு அரை வயிற்றுக்காவது கஞ்சிஊத்தவேண்டும் என்ற கனவும் இருக்கும்.
இதில் தனது குழந்தை எதற்கும்பயப்படாமல் வீரனாக வரவேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதை சின்னவயதிலிருந்தே எப்படி கற்றுதர வேண்டும் என சில யோசனைகளை கீழே எழுதியுள்ளேன்.
ஒரு வயது ஆகாத குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போதே சில சமயம் கீழேவிழும். பின்னர் எழும்பி மீண்டும் நடக்க ஆரம்பிப்பார்கள். குழந்தை எங்கேவிழுந்துவிடுமோ என பயந்து பயந்து தாய்மார்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நான் கீழே சொல்லியிருப்பது போல செய்தால் அந்த பயம்இனிமேல் இருக்காது.
முதலில் ஒரு சிறிய ஸ்டூல் அல்லது சிறிய மேசை மீது குழந்தையை ஏற்றிவிட்டு கீழே தள்ளிவிடவேண்டும். அப்பொழுது சிறியதாகஅடிபட்டு அது அழும். அதை பொருட்படுத்தவேண்டாம். இதன் மூலம் அந்தகுழந்தைக்கு கீழே விழுந்தால் அடிபடும் அல்லது வலிக்கும் என இயல்பாகவேதெரிந்துவிடும்.
கொஞ்சம் வளர வளர பெரிய மேசையிலிருந்து இப்படிதள்ளிவிட்டால் உங்கள் குழந்தை இயல்பாகவே அந்த அனுபவத்தைபெற்றுவிடும். இதன் மூலம் சிறிய வயதிலிருந்தே வலியை தாங்கும் சக்தியும்கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து குழந்தை கடைசிவரை கீழே அல்லதுநடக்கும் போதோ கீழே விழாது. அம்மாக்கள் ஜாலியாக அவர்கள் வேலையைபார்க்கலாம்.
எதிர் காலத்தில் யாரையும் நம்பி ஒரு காரியத்தில் இறங்கக்கூடாதுஎன்ற அனுபவம் அனுபவரீதியாகவே உங்கள் குழந்தைக்கு கிடைக்கும்.
குறிப்பு. ஸ்டூல் அல்லது மேசை கிடைக்காதவர்கள் குழந்தை நடக்கும்போதுகாலை தட்டிவிடவும். ஆனால் புல்லு உள்ள இடமாக பார்த்து காலைதட்டிவிட்டால் அதிகமாக அடி படாது.
இவ்வாறு பழகுவதனால் பிற்காலத்தில் பிறர் காலை வாரி விட்டு குறுக்கு வழியில் தான் முன்னேறும் வித்தையை குழந்தை கற்றுக் கொள்ளும். அதனால் அரசியலில் ஜொலிக்கலாம். நல்ல எதிர்காலம் உண்டு.
குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது எப்பவுமே இனிப்பு வகைசாப்பாடுகளை கொடுக்கும்போது இடையில் மிளகாய் கொடுத்தால் நல்லது. காரம்என்றால் என்ன என்பது தானாகவே குழைந்தைக்கு தெரியும். எதிகாலத்தில்நிறைய காரம் சாப்பிடும் பழக்கமும் கூடவே கோபம் வரும் தன்மையும் கிடைக்கும். அப்போது தான் கண்மூடித்தனமாக யாரையும் அடித்து நொறுக்க முடியும். உங்கள் குழந்தை வீரனாகி விடுவான். அதற்கு பரிசாக "அண்ணாத்தே...." "வாத்தியாரே..." என செல்ல பெயர்களும் "தாதா" என்கிற பட்டமும் கிடைக்கும்.
நீங்கள் இதை நடைமுறைபடுத்தும் பொழுது விபரீதம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல...*!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!