இடுகைகள்

ஆகஸ்ட், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது காதலிக்காக...

உன்னுடன் என்ன பேச வேண்டும் என இரவு முழுவதும் யோசித்து வந்தேன்.. உன்னை கண்ட நொடியில் அத்தனையும் மறந்து ஒன்றும் அறியாதவனாய் நிற்கிறேன்.. **************************** உனக்காக நான் எழுதும் காதல் கடிதம் கூட என்னை பார்த்து சிரிக்கிறது.. இதையாவது அவளிடம் கொடுப்பாயா என்று.. **************************** எனக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும் நீயாக இருக்க கூடாதா என என்னை விட அதிகமாக ஏங்குகிறது என் தொலைபேசி.. உன் குரல் அதுக்கும் பிடித்திருக்கிறதாம்.. **************************** பூமியிலும் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. உன்னை கண்ட பின்தான் தெரிந்துகொண்டேன்.. **************************** என் இனியவளே.. தொலைபேசியில் நான் "ஹலோ" என்றதும் சிறிது நேரம் அமைதி காத்து பின் பேசுகிறாயே.. அதுக்கு என்ன அர்த்தமடி.. நீயும் காதலிக்க கற்றுக்கொண்டாயோ.. **************************** தேவதையே...உன்னை காண பேருந்து நிலையத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு சொர்க்கம்தான்..

எது காதல் தெரியவில்லை....

படம்
என் தனிமையின் போதெல்லாம் - நாம் இதழ் வருடிய வார்த்தைகளையே அசை போடுகிறதே உள்ளம் இதுதான் காதலா... மற்றவர்கள் கேலியில் - நீ அகப்பட்டு கொண்டால் - என் மனம் வதைபடுகிறதே அதுதான் காதலா... அருகில் நீ இல்லாத போதும் உன்னுடன் உறவாடி உரையாடி மகிழ்கிறேனே இதுதான் காதலா... எனக்காக நீ தந்தவை தவிர்த்து சுவாச காற்று உள்பட - நீ வருடிய அனைத்தையும் சேகரிக்கிறேனே இதுதான் காதலா... யார் கேட்டும் இல்லை என்ற ஒன்றை - நீ கேட்க நினைக்கும்போதே கொடுக்க தோன்றுமே அதுதான் காதலா... பிரிவுகள் நேரும்போது ஏதோ ஓர் உணர்வு - நம் விழிகளுக்குள் நீர் நிரப்பி செல்கிறதே அதுதான் காதலா... ஊரே நம் உறவை காதலென்ற போது நீ மட்டும் மறுக்கிறாயே 'நாங்கள் நண்பர்களேன்று'... எது காதல் தெரியவில்லை இந்நிகழ்வுகள் அனைத்தும் நட்பிலும் சாத்தியம் என்பதால்...

காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!!

காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!! சேர்ந்தே இருந்த நேரத்தில்சண்டையிட்டே கழித்தோம்.. பிரிந்த சில நொடிகளில்ஒருவரில் ஒருவரை இழந்தோம்.. ஏந்தான் நாம் பிரிந்தோம் என்றுஏங்கியே கழித்தோம்.. நம் பிரிவை!ஏன் இன்னும் சேரவில்லை என்றுஎப்போதும் பார்த்தோம்.. நம் சாலைகளை!ஏன் இன்னும் விடியவில்லை என்றுமாலை ஏழுமணிக்கே மணி பார்ப்போம் நாம்! இன்னுமா இருட்டவில்லை என்றுமதியத்திலேயே மதி மயங்குவோம் நாம்!இப்படி நமக்கான காலமும்நமக்கான நாட்களும்நீண்டுகொண்டுதான் இருக்குகிறது!நாம் நேற்று விடைபெற்றதில் இருந்து!

இது போதுமடி எனக்கு....

இது போதுமடி எனக்கு.... அதிகாலையில்உன் கொலுசு ஒலியின் சத்தம்.. உன் கண்ணில் விழிக்கும்என் கண்கள்இது போதுமடி எனக்கு.... குளத்தில்குளிக்கும் பறவைகளின் மத்தியில்முகம் துடைக்கஉன் முந்தானை... இது போதுமடி எனக்கு.... ########$$$$########‍ கடற்கரை மணலில்என் பாதச்சுவட்டின் மேலேஉன் கால் வைத்து நடந்து வந்தாய்... தீடீரென நின்றதும்கால் வலிக்கிறதா என்றேன்.. இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..காதலுடன்...

செல்போனில் நமக்கு வரும் இ-மெயில் தகவல்களை பெற

செல்போன் பயன்கள் அனைவரும் அறிந்ததே...அதில் இன்னும் கூடுதல் வசதியாக நமது செல்போனில் நமக்கு வரும் இ-மெயில் தகவல்களை பெறுவதை பற்றி இப்போது பார்க்கலாம். நாம் ஒவ்வொரு முறையும் கணிணியை ஆன் செய்து நமக்கு இ-மெயில் வந்துள்ளதா என பார்க்கவேண்டாம்.இந்த தளத்தில் நமது விவரங்களை பதிவு செய்தாலே போதும். நமக்கு இ-மெயில் வந்ததும் , நம்முடைய cellphone-ல் sms வந்து விடும்.முதலில் இந்த இலவச சேவையை பெற இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு முதலில் இந்த தளம் ஓப்பன் ஆகும். இதன் மேற்புறம் உள்ள இந்த விண்டோ வில் உள்ள Signup for free என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து Register கிளிக் செய்யுங்கள். இந்த தளத்தை மூடிவிடுங்கள். இப்போது உங்களுடைய செல்போனில் ஒரு குறுந்தகவல்( SMS ) வரும். அதில் உங்களுக்கு பாஸ்வேர்ட் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதை குறித்துக்கொள்ளுங்கள். இப்போது மீண்டும் அதே தளத்தை திறங்கள்..இதில் உள்ள மொபைல் நம்பர் என்கிற இடத்தில் உங்கள் மொபைல் எண்ணை குறிப்பிடுங்கள். அதன் கீழ் உள்ள Password-ல் உங்களின் செல்போனில் வந்த பாஸ்வேர்டை க...

ஆஸை நாயகி

என்னவளுக்கு இதை காணிக்கையாக்குகிறேன்

காதல் மழை...

சங்கீதமாய், ரம்யமாய், பெண்மையாய், யாழிசையாய் இருக்கிறதுஉன் பெயர்.. அடைக்கலம் தருபவள் என்றுஅர்த்தமாம் உன் பெயருக்கு.. அதை உண்மையாக்குஎன் காதலுக்கு அடைக்கலம் கொடுத்து.. என் பெயரையாராவது கேட்டால் கூடஉன் பெயரை சொல்லிஅசடு வழிகிறேன்.. எந்த மொழியில் எழுதினாலும்அழகாய்த்தான் இருக்கிறதுஉன் பெயர்.. உன் பெயரை சொல்லியாராவது அழைத்தால்உனக்கு முன்னால் திரும்புகிறேன்அனிச்சையாய் நான்.. அழகு குழந்தைகளைபார்க்கும் பொழுதெல்லாம்உன் பேர் சொல்லியே கொஞ்சுகிறேன்.. என்னையுமறியாமல்.. உன் பெயர் தாங்கியசாலையோர பெயர் பலகைகள் மட்டும்அதிகமாய் மிளிர்கின்றன..காத்திருக்கிறேன்.. எப்போது வெளிவரும்?உன்பெயரில் தொடங்கும் திரைப்பாடல்! கவிதை ஒன்று எழுத நினைத்துகாகிதம் பல கசக்கி, கடைசியில்உன் பெயர் மட்டும் எழுதி முடிக்கிறேன், காவியம் எழுதிய திருப்தியில்.. காதல் மழை... காதலிப்பவர்கள்சொர்க்கத்தை அடைவார்கள்.. காதலிக்கப்படுபவர்கள்சொர்க்கத்தை உணர்வார்கள்.. ************** கலைந்து போன ஒரு மேகத்தின் கண்ணீர் துளி இந்த காதல் மழை.. நனைவோம் வாருங்கள்..

உன் பிரிவு,

உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது.. பின் இரவு நேரங்களில் அதுபேயாட்டம் ஆடுகிறது.. ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்உன் நினைவுகளை கலைத்து போடுகிறது.. உன் வாசனையை, அறை எங்கும்நிரப்பி மாயாஜாலம் செய்கிறது.. காதல் வலியால் துடிப்பதைகுரூரமாய் பார்த்து சிரிக்கிறது.. பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில், பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும். கண்ணை மூடி தூங்க முனைகையில், காதல் கதைகளை உரக்க பேசுகிறது. சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில், சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது. அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் எனஅறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன். உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது... *************** கண்ணீருடன்,

அழகி

உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்பிரம்மனிடம் கோவிக்கிறார்கள்..ஏன் இப்படி ஒரு அழகியைதேவலோகத்தில் படைக்கவில்லையென... ********* நீ சோம்பல் முறிக்கும்அழகை பார்க்கவே தினம்சீக்கிரம் உதிக்கிறான்சூரியன். ***** இறந்த செல்கள் தான்நகமாக வளருமாம்..நீ நகம் கொறிக்கையில்இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன.. ***** இந்தியாவில் வசந்தகாலம்பிப்ரவரி மாதத்திலாம்..இருக்காதா பின்னேநீ பிறந்தது பிப்ரவரி 19. ***** என் வலது கண்ணில்விழுந்த தூசியை ஊதினாய் நீ..பொறாமையில் அழுகிறதுஎன் இடது கண்.. ****** நிலவு பூமியை சுற்றுகிறதா,இல்லவே இல்லை...பூமியில் இருக்கும்உன்னைத்தானே சுற்றுகிறது.. ******* காதலுடன்,

மனைவி

கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! - சாக்ரடீஸ் தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! - சேம் கினிசன் எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! - பேட்ரிக் முரே உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் - சிக்மென்ட் பிராட். ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! - பிராங்களின். ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! - யாரோ "காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட் பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே "ஆண்" னிடம்!ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா "பெண்" னிடம்!!

பெண்கள் புடவை

படம்
புடவை ஒரு பர்பெச்சுவல் கிப்ட். பெண்கள் என்ன படித்திருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், (முப்பதுக்கு மேல்) என்ன வயசாக இருந்தாலும் அவர்களிடம் எத்தனை புடவைகள் இருந்தாலும்…அவர்களுக்கு ஒரு புடவை பரிசளிக்கிற போது குழந்தை மாதிரி சந்தோஷப் படுகிறார்கள். சேலத்தின் பிரபல ஜவுளிக்கடை ஒன்றுக்கு நேற்று போயிருந்தோம். எதைப் பார்த்தாலும் “ப்ச்.. இது ஏற்கனவே இருக்கு” என்று ஒதுக்கிக் கொண்டிருந்தாள் என் மனைவி. பக்கத்தில் ஒரு பெண்கள் கூட்டம் உற்சாகமாக புடவைகளை தேர்ந்தெடுத்து குவித்துக் கொண்டிருந்தது. “அங்கே பாரு. அவங்க ஆட்டிட்யூட்லேயே உப்பு-புளி-மொளகா மாதிரி மாசா மாசம் புடவை வாங்கற கூட்டம்ன்னு தெரியுது. அவங்க செலக்ட் பண்ண எந்தக் கஷ்டமும் படவில்லை.” “அவ்வளவு வாங்கறப்ப ரிப்பெடிஷன் இருந்தா பரவாயில்லே.” கஸ்டமரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சீனியர் ஊழியர் விடுவிடுவென்று வந்தார். அந்தக் கவுண்டரில் இருந்த பையனிடம், “என்னடா, கிளி ஜோஸ்யத்திலே கிளி சீட்டு எடுக்குற மாதிரி ஒண்ணொண்ணா காட்டிகிட்டு இருக்கே.. ” என்று ஒரு பத்துப் பனிரெண்டு புடவைகளை எடுத்து ரம்மி ஆட்டத்தில் டிக்ளேர் செய்வது போல போட்டார். தொடர்ந்து என...

காமம்

என்னவளே என் இனியவளே அன்பே நீ எனக்காக எழுதப்பட்ட கடிதம் எப்போது வந்த சேரப்போகிராய் உனக்காக வெகு நாட்களை கட்டிக்கிறேன் உன்னை படித்து பார்க்க இப்படிக்கு உன்னவன் உன் இனியவன்