இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்ப்பிணி பெண்கள் காபி குடித்தால் குழந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு

படம்
கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால், அவர்களின் குழந்தைக்கு லுகேமியா பாதிப்பு ஏற்பட 60 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   American Journal of Obstetrics and Gynaecology -இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில்,  கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால் அவர்களின் குழந்தைக்கு ரத்த புற்றுநோய் (லுகேமியா) பாதிப்பு ஏற்பட 60 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்ப்பிணி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் காபி குடிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இதே ஆபத்து 72 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காபியில் உள்ள கபைன் கருவின் செல்களில் டி.என்.ஏ. மாறறத்தை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமெனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

படம்
உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.   உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.   பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.   பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆ...

மருத்துவம்

சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம் உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க ... தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு மூலிகைகளின் அற்புதங்கள் ப‌சி‌யி‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் க‌றிவே‌ப்‌பிலை! க‌றிவே‌ப்‌பிலை, சு‌க்கு, ‌மிளகு, ‌தி‌ப்‌பி‌லி, காய‌ம், இ‌ந்து‌ப்பு சம அளவு எடு‌த்து பொடி செ‌ய்து, சுடுசாத‌த்‌தி‌ல் கல‌ந்து நெ‌ய் ‌வி‌ட்டு ... சில நோய்களுக்கு வீட்டு மருத்துவம் மாமரத்தின் வேர்ப்பட்டயை 50 கிராம் எடுத்து, இடித்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீ விட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடி கட்டி வேளைக்கு ... உடற்பயிற்சிக்குப் பிறகு தக்காளி ஜூஸ் அருமை! உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பலர் சக்தி பானம் என்று எதைஎதையோ குடித்து உடலைத் தேற்றி வருகின்றனர். ஆனால் தக்காளி ஜூஸ் அருமையான எனெர்ஜி ... விடாமல் அடிக்கடி இருமல்,நெஞ்சில் தீராத சளியா? இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் ...

குழ‌ந்தை‌க்கு ச‌ளி தொ‌ல்லையா?

குழந்தைகளு‌க்கு அ‌வ்வ‌ப்போது ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினை எ‌ன்றா‌ல் அது ச‌ளி தொ‌ல்லைதா‌ன். இதனை எளிய நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்தலாம். இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது. வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், பா‌லி‌ல் மஞ்சள் தூ‌ள் சே‌ர்‌த்து குழந்தைக்கு கொடுக்க வே‌ண்டும். இரண்டு மூன்று நா‌‌ட்களு‌க்கு இ‌து போ‌ன்று செய்தால், ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதேபோல் மற்றொரு குறிப்பும் உள்ளது. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் ஜலதோஷம் நீங்கிவிடும். இந்த குறிப்பு பெரியவர்களுக்கும் பொருந்தக்கூடியன.

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

படம்
FILE ஜலதோஷ‌ம், அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்க‌ள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுக‌ள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோ‌ய்க‌ள் வந்து மனிதர்களை பாடா‌ய்படுத்தி வருவது குறித்து நான் எழுதியது ஏற்கனவே இந்த இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் எனக்கு வந்த நோ‌ய் மற்றும் குறைபாடுகளுக்கு நான் செ‌ய்து கொண்ட வைத்தியம் பற்றி அனுபவப்பூர்வமாக எழுதியிருந்தேன். அந்த வரிசையில இன்னும் நிறைய அனுபவ வைத்தியம் இருக்க ு, அதை சொல்றேன ், பாருங்க... பலனை நீங்களும் அனுபவியுங்க! வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டர ை ‘மடக் மடக ் ’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செ‌ய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும ், கொஞ்சநேரத்துல தலைவல ி, தொண்டை கரகரப்ப ு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர ், மோர் சாப்பிடுறதுனாலயும ், ஜூஸ் குடிக்கிறதுனாலயும ், மழையி ல நனையிறதுனாலயும ், பூசணிக்கா‌ய் சாப்பிடுறதுனாலயும்கூட ச...

முக‌ப்பரு வராம‌ல் தடு‌க்க...

துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது. முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும். சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும். எ‌ண்ணெ‌ய்த் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.

துளசி இலையின் மருத்துவ குணங்கள்:

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொ...

முடி வளர சித்த மருத்துவம்

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 க...

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம். * இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும். * இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும். * கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம். * பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை துடைத்து துடைத்து புண்ணாக்காமல் சுலபமான இந்த முறையின் மூலம் மூக்கிலிருந்து சளியை எளிதாக வரச்செய்து விடலாம். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய் கொண்டு மிகவும் சுலபமான முறையில் அனைவரையும் அவதிப...

இதயத்துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய்

ஏலக்காய் என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம். ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது. வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது. ஏலக்காயினின்று பெறப்படும் எண்ணெய் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது. மேலும் கிருமி நாசினியாக விளங்கக் கூடியது. கால் பிளாடர் என்னும் பித்தப் பையைத் தூண்டி பித்தத்தைச் சுரக்கச் செய்வது. ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து பைபர் எனப்படும் நார்சத்து விட்டமின் சத்துக்களான விட்டமின் சி, நியாசின், பெரிடாக்ஸின், ரிபோபிளேவின், மற்றும் தயாமின் ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்பு...

செரிமான பிரச்சனைக்கு தீர்வு தரும் ஜாதிக்காய்

ஜாதிக்காய் என்பது ஒரு காரமான, சூடான மற்றும் இனிப்பு சுவை கொண்ட மசாலா பொருளாகும். இது உங்களுடைய சாப்பாட்டிற்கு சுவை, மணத்தை மட்டும் கொடுப்பதில்லை அதோடு உடல் நலத்திற்கு பல வழிகளில் ஊட்டத்தையும் அளிக்கிறது. * ஜாதிக்காயில் உள்ள எண்ணெய் மூட்டு வலி குணமாக உதவுகிறது. மேலும் வலி, வீக்கம் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். * ஜாதிக்காயில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளது. இது நம்முடைய உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. * ஜாதிக்காயை தூளாக்கி அதனுடன் தண்ணீர் அல்லது தேன் கலந்து பேஸ்டாக செய்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். இந்த பேஸ்டை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உங்கள் சருமம் தூய்மையாகவும், பருக்கள் மறைந்தும், நிறம் அதிகரித்தும் காணப்படும். * பற்களை பாதுகாக்க இது மிகவும் உதவுகிறது. இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி உள்ளது. அதனால் இது பற்பசைகளில் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. * ஜாதிக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் ...

தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்

தொப்பையை குறைக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கரிகள் மற்றும் கீரைகள் கொண்டு சுலபமாக செய்யலாம். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். அருகம்புல் சாரெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். மேலும் வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசினி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும் இவைகளை பின்பற்றி உங்களது தொப்பையை குறைத்திடுங்கள்.

ஜலதோசத்தின் போது மூக்கடைப்பை அகற்ற...

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஜலதோசம், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனையால் சுவாசிக்க அனைவருமே சிரமப்படுவார்கள். சிறு குழந்தைகளுக்கு மூக்கடைப்பு இருந்தால் உறிஞ்சு குழலைக் கொண்டு கோழையை உறிஞ்சி எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் மூக்கடைப்பு நீங்கும். பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூக்கடைப்பு இருந்தால் உப்பு கலந்த நீரைக் கையில் சிறிதளவு எடுத்து மூக்கின் அருகில் வைத்து உறிஞ்ச வேண்டும். இப்படி செய்வதால் கோழையை நீக்கும். ஜலதோசத்தின் போது சுவாச நாசிகள் திறந்து இருக்க வேண்டும். அதனால் நீராவியை சுவாசிக்க வேண்டும். அப்போது தான் ஜலதோசத்தை கட்டுப்படுத்த முடியும். ஜலதோசம் உள்ளவர்கள் நெல் வேக வைக்கும் இடத்தில் இருந்தாலே ஜலதோசம் நீங்கி விடும். மேலும் கபால சளியும் குறையும். அனைத்து வீட்டிலும் உள்ள உப்பை கொண்டு சுலபமாக எளிய முறையில் மூக்கடைப்பை நீக்கலாம்.

புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன. வாழைப்பழம் குடலில் சேரும் அமிலத் தன்மையைச் சமப்படுத்த வல்லது. இதனால் நெஞ்செரிச்சலிலிருந்து மாபெரும் நிவாரணத்தை தருகிறது. வாழைப் பழத்தோடு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவதால் இருமல் விரைவில் குணமாகும். பழுத்த நேந்திரம் பழமாக இருந்தால் இன்னும் விரைவில் குணம் தரும். வாழைப் பழத்தோலை பாலுண்ணிகளின் மீது பழச் சதைப்பகுதியை கட்டிவைக்க நாளடைவில் சுருங்கி உதிர்ந்து விடும். கொசுக் கடியால் நமைச்சல் கண்டபோது கடிவாயில் வாழைப்பழத் தோலின் சதைப்பகுதி கொண்டு சிறிது நேரம் தேய்ப்பதால் அரிப்பு அடங்குவதோடு தடிப்பாக வீக்கம் காணுவதும் மறையும். வாழைப்பழத் தோல்களை காயவைத்து எரித்துப் பொடித்து வைத்துக் கொண்டு புண்களின் மேற்பூச்சு மருந்தாகப் போடுவதால் புண்கள் விரைவில் ஆறிவிடும். வலிகண்ட இடத்தில் வாழைப்பழ தோலை சிறிது நேரம் கட்டி வைப்பதால் வலி சீக்கிர...

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

படம்
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப ்போறா !? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படிய...

கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம்?

உணவு இல்லையென்றால் உடல் சுருங்கி விடும் உடல் சுருங்கினால் உயிரும் சுருங்கி விடும் என்பது சித்தர்களின் வாக்கும் அறிவியலின் ஆராய்ச்சியும் உண்மையும் கூட சாப்பிடுவதின் நோக்கம் என்ன? உடலின் சக்தி நிலையை பெறுவதற்குதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.வேலையே செய்யமால் தூங்கி கொண்டே இருக்கார் அய்யா அவருக்கும் இப்படிதானா? என்று ஒருவர் கேட்டகிறார் என்று வைத்து கொள்ளுங்கள். வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் உடல் தன் வேலைகளை செய்வதால் அதற்க்கு சக்தி தேவை படுகிறது. ஆனால் நம் உண்ணும் உணவுகளில் என்ன வகையான சக்தி கிடைகிறது என்பது மட்டும் நமக்கு தெரிவதில்லை நம் உண்ணும் உணவுகள் ஆறு வகையான சத்துக்களாக பிரிக்கபடுகின்றன. 1) புரோட்டின் 2) கொழுப்பு 3) கார்போ ஹைட்ரேட்கள் 4) தாது உப்புக்கள் 5) நீர் 6) விட்டமின்கள் நம் உடலின் சக்தியை அளவிடபடுக்கின்றன.உணவில் சேமிக்கப்பட்டுள்ள ரசாயன சக்தியை இது வெப்ப சக்தியாக மாற்றி காலோரி என்ற அலகால் குறிப்பிடுக்கின்றனார் மருத்துவர்கள் தாவர எண்ணெய்கள் -----900 எண்ணெய் ------731 முந்திரி பருப்பு ------596 தேங்காய் ------444 கரும்பு -சக்கரை ------400 வெல்லம் ------383...

உடல் பருமனா!!!! புஸ்ஸென்று ஊதித் தள்ளி விடலாம்।!!

இந்தியத் துணைக் கண்டத்தில் ‘வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்று அடிக்கடி இலக்கிய வாதிகள் கூறக்கேட்டிருப்போம். வாளோடு பிறக்க முடியுமா? ஏனிந்த பில்டப் கொடுத்தார்கள் என்று சிந்திப்பது இருக்கட்டும். மாற்றாரின் தலைகளை அறுப்பதுடன், நம் மண்ணில் விளைந்த தழைகளை அறுத்து உண்டு நோயின்றி வாழவும் வாளொடு பிறந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் வீரம் மட்டுமின்றி உடலோம்பும் விவேகமும் நிறைந்தவர்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இலக்கியத்தில் இருக்கின்ற நல்ல விஷயங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துக் கூற அவ்வப்போது ஆசைப்படுவார்கள் நம் தமிழ் எழுத்தாளர்கள். ஆனால் ஏன் என்றே தெரியவில்லை தமிழ் ஏடுகளில் இருக்கின்ற, தமிழர்கள் பயன்படுத்திய எளிமையான மருத்துவ முறைகளை எடுத்துக் கூற அவர்கள் முயற்சிப்பதில்லை. அவர்கள் கூறினாலும் நம் மக்கள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று நினைப்பார்களோ என்னவோ, அவற்றைப் படிப்பதும் இல்லை. பயன் படுத்துவதும் இல்லை. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் ...

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை

படம்
பெண்மை அழகு. அதிலும், தாய்மை அழகுக்கு அழகு. அப்பறம் ஏன் இந்த அழகு சாதன பொருள்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை? பெண்களே கொஞ்சம் கவனத்தில வச்சுக்கோங்க. ’ ஈன்று புறந்தருதல் ’ மட்டுமா உங்கள் கடமை. அக்குழந்தையைச் சான்றோனாகவும், நோயகள் அற்றவனாகவும் ஆக்குவதும் உங்கள் கடமை இல்லையா? அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில்!! உங்கள் அழகு சாதனப் பொருள் ஆசையால் எதிர்காலத்தில் வாரிசு இல்லையே என்று உங்கள் மகனும், பேரப்பிள்ளைகள் இல்லை என்று நீங்களும் சேர்ந்து வருந்த வேண்டிய சூழல் உருவாகிறதாம். உங்களுக்கே தெரியும் இப்போது பரவலாகப் குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் ஆண்களே என்கிறது மருத்துவ ஆய்வு. ஆண்களுக்கு முக்கியமான குறை ஆண்மைக் குறைவு குறைபாடு. ’ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய் இனிக்கும்…, சாம்பல் ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து’ எவ்வளவு அழகான பாடல். அது விலை கொடுத்து வாங்கும் முத்து இல்லங்க. என்ன விலை கொடுத்தாலு...

பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகாதீர்கள்!

"உளவியல் நோக்கில் பாலியல் அடிமையாவதை எப்படித் தடுக்கலாம்?" என்ற கேள்விக்குப் பதில் தேடும் பதிவாக இதனைக் கருதிக்கொள்ளவும்.   உள்ளத்தை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே ஆக்க முயற்சிகளில் ஈடுபடமுடிகிறது. நாம் தூங்கிவிட்டால், உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படுகிறது. கனவு காண்கிறோம்; விழித்துக் கொள்கிறோம். ஆயினும், தூங்காமலே சற்றுச் சோர்வுற்றாலும் கூட உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படும். எதையெதையோ நினைப்போம்; திடுக்கிட்டு விழிப்போம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த உண்மையே!   உணர்வற்ற உள்ளம்(Unconscious Mind); உணர்வு உள்ளம்(Conscious Mind) செயற்படாத வேளை தனது முழுப்பலத்தையும் காட்டத் தொடங்கிவிடும். அதனால் தான் கனவுகள், கற்பனைகள், பாலியல் (Sex) இச்சைகள் தோன்ற வாய்ப்பு ஏற்படுகிறது.   உணர்வற்ற உள்ள(Unconscious Mind)த்தை Carl Jung (Sigmund Freud இன் மாணவர்) அவர்கள் Id, Libido என இரண்டாக வகுத்து Id அறிவு சார்ந்த செயலுக்கும் Libido பாலியல் (Sex) இச்சைகள் சார்ந்த செயலுக்கும் காரணம் எனத் தெரிவித்தார். ஆயினும், பாலிய...

இஸ்லாம் பற்றிய எனது புரிதல்.

இஸ்லாம் பற்றிய எனது புரிதல். இஸ்லாமை மதம் என்று சொல்வதை விட மார்க்கம் (வழி) என்று சொல்வதே பொருத்தமானதாகும். அப்படியே இஸ்லாமியர்களும் சொல்லிக் கொள்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் அதிகமாக அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் போதிக்கப்படுகின்றது. அவர்களுடைய கலாச்சாரமானது முழுக்க முழுக்க வேதத்தை (திருக் குர்-ஆன்) அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒருவனுடைய சமூக வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை எப்படி வாழ வேண்டும் என்று இஸ்லாமியம் சொல்லிக் கொடுக்கிறது.  இவர்களது வேதம் அல்லாவிடம் இருந்து நேரடியாக அருளப்பட்டதாக ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மறு கேள்விக்கு இடமின்றி நம்புகிறார்கள். இது ஏனைய மதத்தவர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனால் இது தான் இஸ்லாமியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் தான் இவர்கள் வேதத்தை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள்.  இஸ்லாமியத்தில் ஒரே கடவுட்கொள்கை தான் அடிப்படை. அல்லாவைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதும் நபிகள் நாயகம்  மட்டுமே கடைசி இறை தூதர் என்பதும் இவர்களது ...

ரோஜாவின் மருத்துவ குணம்

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும். குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும். மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது. அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்...

உங்கள் பணத்தில் ஒரு உயிர்கொல்லி

நம்மில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நோய்தான், ஆனால் அது வந்துவிட்டால் காலம் கடந்தாலும் மரண‌த்தை வெல்லமுடியாது.... அதுதான் புற்று நோய்... ஆனால் புற்று நோய் வராமல் தடுக்க நாம்மால் முடியுமே.. இந்த நோய் யாரை பாதிக்கும், எப்படி பாதிக்கும்? பொதுவாக இந்த நோயானது இளைய சமுதாயத்தினரையே பாதிக்கிறது, இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் பான்மசாலா, குட்கா, மது போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதை எப்படி தடுப்பது? 1). நம் பிள்ளைகளை நாம் கவனமாக வளர்க்கவேண்டாமா.. ஆம் பிள்ளைகளின் பழக்கவழக்கங்களை கண்கானிக்கவேண்டும். 2). 15 வயது முதல் 27வயது வரை இளைஞர்கள் தடம்பிறழ வாய்ப்புகள் அதிகம், அந்த வயதில் பிள்ளைகளை நாம் கண்காணிக்கவேண்டும். நாம் ஒரு காவலனாக, நாண்பனாக, நல்ல தாயாக, தந்தையாக மாறி பாதுகாக்கவேண்டியது அவசியம். 3) பிள்ளைகள் தவறு செய்கிறார்கள் என்று தண்டித்தால் அவர்கள் மேலும் தீவிரமாக செய்வார்கள், நாம் தான் முள்ளில் மாட்டிய சேலையை போன்று யாருக்கும் நக்ஷ்டமில்லாமல், பிரச்சனையை தீர்க்கவேண்டும். 4) 2020ல் வல்லரசை காண்போம் என்று (இளைஞர்களை மனதில் நிருத்தி)அப்துல்கலாம் சொன்னார், ஆனால் நம் இளைஞர்...

நபி மருத்துவம் - ஜவ்வரிசி

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக "ஜவ்" என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள். பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி அரிசியை இடித்து அதைப் பாலில் கொதிக்க வைத்து, சுவைக்காக தேன் கலந்த ஒருவிதமான கஞ்சியை பெருமானார் வீட்டில் சமைப்பார்கள். இதற்கு அரபு மொழியில் "தல்வீணா" என்று பெயர். வீட்டில் யாராவது உடல் நலமின்றி இருந்தால் அவர்கள் பூரண குணம் பெறும்வரை "தல்வீனா" கஞ்சி தயாரித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம். சிலரின் மரணத்தால் குடும்பத்தினருக்கு ஏற்படும் துக்கம், கவலை, அதிர்ச்சி, சோர்வு, பயம், கோழைத்தனம் நீங்கி தைரியத்தை உண்டாக்க "தல்வீனா" க...