இதயத்துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய்

ஏலக்காய் என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம்.

ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.

வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது. ஏலக்காயினின்று பெறப்படும் எண்ணெய் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது. மேலும் கிருமி நாசினியாக விளங்கக் கூடியது. கால் பிளாடர் என்னும் பித்தப் பையைத் தூண்டி பித்தத்தைச் சுரக்கச் செய்வது.

ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து பைபர் எனப்படும் நார்சத்து விட்டமின் சத்துக்களான விட்டமின் சி, நியாசின், பெரிடாக்ஸின், ரிபோபிளேவின், மற்றும் தயாமின் ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியன மலிந்துள்ளன.

ஏலக்காயை உணவில் சேர்ப்பதற்கான காரணம் அதன் மணந்தரும் தன்மைக்காக மட்டுமல்ல அது வாயுவை வெளியேற்றக் கூடியது. செரிமானத்தை துரிதப்படுத்தக் கூடியது. குடலின் சளிப் படலத்தை குளிர்விக்கச் செய்வது, இதனால் சீரண உறுப்புகள் செம்மையாகச் செயல்பட ஏதுவாகின்றது.

ஆயுள் வேத நூல்களின் படி ஏலக்காய் குடலிலுள்ள வாயுச் சத்தையும் நீர்ச்சத்தையும், கட்டுக்குள் வைத்து உண்ட உணவை விரைவிலும் முற்றிலுமாகவும் சீரணிக்க உதவுகின்றது என்பது தெரிய வருகின்றது ஏலக்காயில் நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் நறுமணம் தருவதாகவும் இருக்கிறது.

வாய் துர்நாற்றத்துக்கு முக்கியமான காரணங்களான போதிய செரிமானமின்மை மற்றும் குடற்புண்களைச் சரி செய்யும் வல்லமை ஏலக்காய்க்கு உள்ளது. வாய் துர்நாற்றத்துக்கான வேறு எக்காரணம் ஆனாலும் அவற்றைக் கண்டிக்க கூடியதும் ஏலக்காய் மட்டும் ஆகும். குடல்புண் (அல்சர்) என்பது மிகச் சாதாரணமாக இன்று எல்லோராலும் சொல்லப்படுவதாக உள்ளது.

இது மிகத் துன்பம் தருவது மட்டுமின்றி பல அறுவைச் சிகிச்சைக்கும் நம்மை ஆளாக்குகிறது. ஏலக்காயில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் உட்சுவர் பகுதிகளுக்கு பலத்தைத் தருகிறது. மேலும் வாயினுள் ஊறும் எச்சிலை அதிகமாக சுரக்கச் செய்வதால் அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.

ஏலக்காயில் உள்ள எண்ணெய் சத்து ஒருவகை குளிர்ந்த தன்மையை உண்டு பண்ணி வயிற்றெரிச்சலைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. ஏலக்காய் நுரையீரலின் ரத்த ஓட்டத்தை தூண்டிச் செம்மைபடுத்த வல்லது. இதனால் நுரையீரலைச் சரியாக இயக்கி சுவாச நாளங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.

ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, சளி, இருமல் ஆகியவற்றினின்று நிவாரணம் தருகின்றது. நெஞ்சுச் சளியைக் கரைத்து வெளித்தள்ளவும் ஏலக்காய் உதவுகின்றது. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால் உடலுக்கு சக்தியைத் தரும் ஒரு புதையலாகக் கருதப்படுகிறது.

உடலிலுள்ள ரத்தம், நீர்மம் திசுக்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான பொட்டாசியம் ஆகும். ஏலக்காயில் மிகுந்துள்ள இச்சத்து இதயத்துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை (பி.பி) சமப்படுத்த உதவுகின்றது. ஏலக்காயில் உள்ள செம்புச் சத்து, இரும்புச் சத்து, ரிமோபிளேவின், விட்டமின் சி, நியாஸின் ஆகியவை சிகப்பு அணுக்கள் உற்பத்திக்கு முக்கியமானவை.

சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையிலிருந்து விடுதலை தருகிறது. ஏலக்காயில் நல்ல ஊட்டச்சத்தும் (டானிக்) தூண்டும் சத்து இருப்பதால் உடலுக்கு பலம் தருவதோடு உடல் உறவுக் குறைபாடுகளை போக்கக் கூடியது. விந்து முந்துதல் மற்றும் இயலாமை ஆகிய குறைபாடுகளைப் போக்கும் மருந்தாகக் கூடியது, உடல் உறவில் வன்மையும் நீண்ட நேரத்தையும் தரக் கூடியது.

இரண்டு அல்லது மூன்று ஏலக்காய்களைப் பொடித்து எடுத்துக் கொண்டு அத்துடன் சிறுதுண்டு இஞ்சி, நான்னைகந்து இலவங்கப்பூ (கிராம்பு) சிறிது தனியா (கொத்துமல்லி விதை) ஆகியவற்றை சேர்த்து அரைத்து வெந்நீருடன் உள்ளுக்குச் சாப்பிடுவதால் செரிமான மின்மைக்கும் வயிற்றை நிரப்பிய வாயு வெளியேறுவதற்கும் உதவும்.

ஏலக்காய் டீ தலைவலியையும் போக்கும். ஒரு கப் தேனீர் எனில் வழக்கமான தேயிலை தூளைச் சற்று குறைத்து பதிலாக இரண்டு ஏலக்காய் பொடித்து சேர்த்து தேனீர் வைத்துக் குடிக்க சீரணமின்மையால் வரும் தலைவலியோடு சாதாரணமாக வரும் மன அழுத்தம் தணியும்.

நான்கைந்து ஏலக்காயும் சிறிது புதினா இலைகளும் சேர்த்து அரை தம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டிப் போதிய சுவை சேர்த்து மிதமான சூட்டோடு குடிப்பதில் விக்கல் உடனே நிற்கும்.

வெறும் ஏலக்காயை மட்டும் நான்கு போட்டு கொதிக்க வைத்து அத்துடன் பனைவெல்லம் சேர்த்து குடிக்க தலை கிறுகிறுப்பு, வெயிலில் அலைந்ததால் வந்த மயக்கம் போகும்.

அடிக்கடி வாயு வெளியேறுவது எனக்கு அவமானமாக இருக்கிறது என்னால் அலுவலகத்துக்குப் போகவே வெட்கமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏலக்காய் இருக்க ஏன் அஞ்சுவது, ஏலக்காயை நன்கு காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு வேண்டும்போது அரை தேக்கரண்டி பொடியை எடுத்து 150 மி.கி நீரிலிட்டு கொதிக்க வைத்து உணவு உண்ணும் முன் இதைப் பருகி வர வாயுத்தொல்லை வேறோடு வெட்டி எடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு செரிமானமின்மையாலோ வேறு காரணங்களாலோ வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களைப் பொடித்து அதைத் தேனில் குழைத்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை நாவில் தடவி வர உடனே வாந்தி ஆவது நிற்கும்.

நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பிலிட்டுப் புகைக்கச் செய்து அப்புகையை நுகரச் செய்வதால் குழந்தைகளின் ஜலதோஷம், மூக்கடைப்பு குணமாகும். ஏலரிசி, சுக்கு, லவங்கம், சீரகம் இவை நான்கையும் ஓரெடையாய்க் கொண்டு பொடித்து தூளாக்கி வேளைக்கு 17கிராம் வீதம் கொடுத்து வர வயிற்று வலி குன்மம் இவை நீங்கும்.

இரண்டு அல்லது மூன்று ஏலக்காயைப் பொடித்து அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பாலோடு காய்ச்சி போதிய சுவை சேர்த்து இரவு படுக்குமுன் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி சோகையும் நீங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!