தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை
பெண்மை அழகு. அதிலும், தாய்மை அழகுக்கு அழகு. அப்பறம் ஏன் இந்த அழகு சாதன பொருள்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை? பெண்களே கொஞ்சம் கவனத்தில வச்சுக்கோங்க. ’ஈன்று புறந்தருதல்’ மட்டுமா உங்கள் கடமை. அக்குழந்தையைச் சான்றோனாகவும், நோயகள் அற்றவனாகவும் ஆக்குவதும் உங்கள் கடமை இல்லையா? அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில்!!
உங்கள் அழகு சாதனப் பொருள் ஆசையால் எதிர்காலத்தில் வாரிசு இல்லையே என்று உங்கள் மகனும், பேரப்பிள்ளைகள் இல்லை என்று நீங்களும் சேர்ந்து வருந்த வேண்டிய சூழல் உருவாகிறதாம். உங்களுக்கே தெரியும் இப்போது பரவலாகப் குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் ஆண்களே என்கிறது மருத்துவ ஆய்வு. ஆண்களுக்கு முக்கியமான குறை ஆண்மைக் குறைவு குறைபாடு.
’ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய்
இனிக்கும்…, சாம்பல் ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து’ எவ்வளவு அழகான பாடல்.
அது விலை கொடுத்து வாங்கும் முத்து இல்லங்க. என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உங்க வீட்டுச் சொத்து. மூன்றாம் மாதம் முகம் அது வெளுக்கும்’ என்பது உண்மைதானே.. பின் ஏன் இந்த முகப்பூச்சுகள்? பொதுவாகக் கருவுற்றப் பெண்களுக்கு அழகு கூடிக் கொண்டே வ்ரும். கண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கருப்புப் புடவை வாங்கிக் கொடுப்பது வழக்கம். அது இன்னும் அழகைக் கூட்டும் அது வேறு விஷயம். ஆனால் கருப்புக்கு கண் திருஷ்டியைக் கழிக்கும் சக்தி உள்ளதாம்.
இப்ப தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இயற்கையாகக் குளித்ததும் சாம்பராணி புகை போடுவதும், மணமுள்ள மலர்களைச் சூடுவதும் உடலை நறுமணத்துடன் வைக்கிறது. மேலும் ஏன் இந்த வாசனைத் திரவியங்கள்
மேல் மோகம்?. நீங்கள் எல்லோரையும் போலத்தான் இவைகளை எல்லாம் பயன் படுத்த நினைக்கிறீர்கள். தவறு இல்லை. ஆனால் அது கருவில் இருக்கும் உங்கள் குழ்ந்தைக்குக் கேடு விளைவிக்கிறது என்பதை அறியாமல் இருக்கலாமா? நீங்கள் அந்தக் காலம் போல பேர் சொல்ல மட்டும் பிள்ளையையா பெற்றெடுக்கப் போகிறீர்கள். உலகையே வலம் வர ஒரு வைரத்தை அல்லவா பெற்றெடுக்கப் போகிறீர்கள்.
ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் சொல்றதைக் கேட்டுக்கோங்க...
புற்றீசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை “தாயின் அத்தியாவசியத் தேவை “ எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய்.
அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால்
அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.
எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.
டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.
இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.
இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவது. நானும் ரொம்பவே சிந்திச்சு பார்த்துட்டேன். இது மாதிரி பொமளங்க எல்லாம் என் கண்ணில் மட்டும்தான் படறாங்களா? இல்ல எல்லாரும் கண்டும் காணாம போயிடறாங்களான்னு தெரியல.
அழகு சாதனப் பொருட்களே வேண்டாமுனு தலையில அடிச்சுகிட்டு சொல்லிகிட்டு இருக்கோம். இதுங்களுக்கு இப்படியெல்லாம் ஆசை எங்கே இருந்து வருதுன்னே தெரியலை. தலைவிரிச்சுட்டு ஆடுற இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல!! கருமண்டா சாமி... இதுங்களயெல்லாம் திருத்தவே முடியாது.
தாய்மை ஒரு வரம். பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். இந்தத் தாய்மைக்காக ஏங்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால் இப்படித்தான்.
தன்னை மறந்து கருவில் இருக்கும் தன் குழந்தையின் நலம் ஒன்றையே பத்துத்திங்களும் காத்து வந்ததாலேயே,
” ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பைய லென்றபோதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்
‘ முந்தித் தவங்கிடந்து முந்நூறுநாட் சுமந்தே
யந்திபகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்’
என்று அன்று தொடங்கி
’காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’
என்று இன்று வரை தாய்மையைப் போற்றும் புண்ணிய மண் இது. இப்படி தாய்மையை இறைமையாகப் போற்றக் காரணமே பெண்மையின் தியாகம்தான். பெண் சுதந்திரம் முக்கியம். அது வேண்டாம் என்று கூறவில்லை. பெண்ணியம் பேசுவோம். சுதந்திரம் பேணுவோம். ஆனால் நம் கடமையைத் தவறாது செய்வோம். நல்ல ஆண்மையுள்ள சமுதாய்த்தை உருவாக்குவது நம் கையில் என்பதை மறக்க வேண்டாம். செயற்கை அழகுப் பொருட்களுக்கு பத்துத் திங்களாவது விடை கொடுப்போம். இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே...
ஆதிரா...

கருத்துகள்