செல்பி பொண்ணு செல்பி பையன் - எல்லை தாண்டினால் டேஞ்சர் கண்ணு

ஹாய்' யுவர் வாய்ஸ் ச்சோ ஸ்வீட். எதாச்சும் பேசேன் கேட்கிறேன் இது சரண். 'வாவ்' நம்ம லைப்ல இப்படியொரு பர்ஷனா..காலையில் கண் விழிப்பதில் துவங்கி கனவில் விழுவது வரை எல்லாவற்றையும் சுனந்தா சரணின் காதுகளில் கொட்டினாள். அவளுக்கு மனம் லேசானமாதிரி ஒரு பீல். அவன் தன் மனம் முழுக்க வயலட் பூக்கள் நிரம்பி வழிவதாய் உணர்ந்தான்.

ராங்காலில் எதேச்சேயாக மாட்டிய பையன் இவ்வளவு நல்லவனா என இரண்டு பக்கமும் உருகி உருகி பிரண்ட்ஷீப் வளர்த்தார்கள். காதல் என்ற வார்த்தையை மறந்தும் இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் நட்பு என்ற அஸ்திரம் மனதின் ஆழம் பாய்ந்து அந்தரங்கம் வரை போனது.

ஹாய் செல்லம், டேய் வாலுப் பையா என வார்த்தைகள் அன்பின் குழைந்து ஜில் ஆனது. இவருக்குமான இடைவெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த நீங்க, நாங்க தொலைந்து ஏய், நீ, டா, டி என சுருங்கி வார்த்தைகள் காணாமல் போனது. இவருக்குமே செல்போன் சொர்க்கம் ஆனது. ஸ்கூல், பஸ் ஸ்டாப், டியூசன், மிட் நைட் என இடம் பொருள் ஏவல் என எல்லாம் மறந்து பேசிக்களித்தனர். அவன் குரலை எப்பொழுது கேட்போம் என்று சுனந்தா...தொலைபேசியில் பேசாத நேரத்திலும் அவளது பதில்களை நினைத்து சிரித்துக் கொண்டே பயணித்தான் சரண்.

படி, படி என்று துரத்திய பெற்றோரின் உருட்டல் மிரட்டல், தேர்வில் மதிப்பெண் குறைந்தால் திட்டிய ஆசிரியையின் கண்டிப்பு, விளையாடவே வாய்ப்பற்ற சூழல் அனைத்தையும் விட்டு விலகி விடுதலையாகி நின்றது போல பறந்தனர்.

செல்பி பொண்ணு, செல்பி பையன் இருவரும் செம பிசி. இவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே நின்றாலும் பயமில்லை. பேச்சின் இடைவெளியில் 'ம்' கொட்டலில் 'கோடு வேர்டில்' சத்தம் இன்றி முத்தம் பறந்தது. உச்சியில் மழை... உள்ளங்கைகளில் வியர்வை... காது மடலில் இறங்கிய வண்ணத்துப் பூச்சி கழுத்தின் கீழிறங்கி படபடத்து பறந்தது. டீன் ஏஜ் ஹார்மோன்கள் எக்கச்சக்க உற்சாகத்தில் 'ஐட்டம் சாங்குக்கு' ஆடிக்களித்தது.

இருவருக்குள்ளும் பேசிப் பேசித் தீர்ந்தது போல ஒரு வெறுமை பரவியது. அடுத்து என்ன என்று மனம் ஏக்கம் கொண்டது. செல்போன் கொஞ்சல்கள் தாண்டி, விழிப்பார்வை, துளித் தீண்டல், தனிமை, அணைப்பு, முத்தம் என மனம் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டியது. சுனந்தாவுக்கு அவன் வெளியிடங்களுக்கு அழைக்கும் போது பயம் கவ்வும். யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சரண் தந்த தைரியத்தில் அனைத்திற்கும் துணிந்தாள் சுனந்தா.

தனிமையான நேரங்களில் அவளுக்கே தெரியாமல் தனது செல்போனில் இருவரது நெருக்கத்தையும் படம் பிடித்தான் சரண். உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றும் போதும், பார்க்க முடியாத நேரங்களிலும் இந்த வீடியோவை பார்த்துக் கொள்ளுவேன் என சுனந்தாவை சம்மதிக்க வைத்தான்.

இந்த வீடியோ காட்சிகளை சரண் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான். இதன் விளைவாக நடந்து செல்லும் வழியில் நண்பர்களின் கமெண்ட்...என இந்த விஷயம் விஷம் போல பரவியதால் அவமானமாய் உணர்ந்த சுனந்தா பெற்றோரை, வெளியுலகை நினைத்து தற்கொலைக்கு முயன்றாள். சரண் மனநலம் பாதிக்கப்பட்டான். செல்போன் நரகமாக மாறியது. இவரும் செல்போனை உடைத்தார்கள்.

மனநல ஆலோசகர்கள் கூறுகையில், “பிரச்னை செல்போனில் இல்லை. செல்போனில் பேசுவது பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் யாருக்குமே தெரியாது என்று நினைப்பது தொழில் நுட்ப ரீதியாகத் தவறு. மேலும் டீன் ஏஜ் பருவத்தில் உண்டாகும் ஆர்வத்தில் அந்தரங்கம் வரை ஒருவரை அனுமதிப்பது ஆண், பெண் இருவருக்குமே அபாயம் தான். ஏனெனில் இந்த வயதில் எந்த விஷயமும் ஒரு முறையுடன் நிற்காது.

தடுக்கப்படும் விஷயத்தை மனம் தேடும், வேண்டும் என்று அடம் பிடிக்கும். எனவே தப்பு செய்யாமலும், தவறுக்கு அனுமதிக்காமலும் இருப்பது நல்லது. நட்பிலும் நாகரிகமான இடைவெளி அவசியம்.

இடைவெளியின்றி அனைவருடனும் தனது சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது பெண்களைச் சுற்றி சதிவலை பின்னுவதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்கு சமம். மேலும் தனிமையில் சந்திப்பது, நெருக்கமாகப் பழகுவதும் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும். செல்போன், நெட் என எந்த மீடியாவைப் பயன்படுத்தினாலும் தகவல் தொழில்நுட்பத்தில் பரிமாறப்படும் விஷயங்களை திருடலாம், அழித்ததை திரும்பப் பெறலாம், பலருக்கும் நெட் வழியாகவே பந்தி வைக்கலாம். எல்லா குற்றச் செயல்களுக்கும் மென்பொருட்கள் துணை நிற்கின்றன.

செல்போனில் ரகசியமாக பேசுவதன் மூலம் கிடைக்கும் குருட்டுத்தனமான சந்தோஷத்துக்காக பர்ஷனல் எனும் கதவுகளை திறந்து விடுவது ஆண், பெண் இருவருக்குமே பாதமாக முடியும். நாகரிகமான எல்லைக்குள் நட்பு வளர்ப்பது டீன் ஏஜ் வயதினருக்கு நல்லது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!