வாழ்நாளை நீட்டிக்கும் முட்டைகோசு

வாழ்நாளை நீட்டிக்கும் முட்டைகோசு

We have been prevented from edible vegetables in the diet of children and adults 'muttaikocu' takes an important place.


நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் 'முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்.

இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும். வெளிப்பக்கத்திலிருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்திலிருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் காணப்படும்.

பயன்கள்:

இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக  வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸில் இருக்கும் அயோடினுக்கு முக்கிய உண்டு. முட்டைக்கோஸின் சாறு உடல் பருமனைக் குறைக்கும்.

முகப்பருக்கள் இருப்பவர்கள் வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். அஜீரணக் கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் உடலும், முகமும் இளமை தோற்றதிதுடன் இருக்கும். சொறி, சிரங்கு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

மருத்துவ குணங்கள்:

முட்டைக்கோஸின் இலைகள் மற்றும் வேர்களில் அதிக சத்துக்கள் உள்ளது.

100 கிராம் முட்டைக்கோஸில்  காணப்படும் ஊட்டப்பொருள்

மாவுச்சத்து       -    4.6%
புரதச்சத்து        -      1.9%
அயோடின்        -      1.75கி
இரும்புச்சத்து     -    0.95கி
சுண்ணாம்புச்சத்து - 0.86கி
குளோரின்        - 1.56கி
கந்தகச்சத்து       - 1.35 கி

எப்படியெல்லாம் சாப்பிடலாம்

முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது  அதன் சாற்றை குழம்பிலோ, பொரியல் வகையிலோ சாப்பிட்டு வந்தால் நோய்கள் குணமாகும்.

குடல் சுத்தமாக:

பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்பந்தமான நோய்களினால் அவதிபடுபவர்கள் வாரம் இருமுறை முட்டைக்கோஸை அளவுடன் பயன்படுத்தி வந்தால் அதில் இருக்கும் அயோடின், குளோரின், கந்தக சத்துக்கள் குடலை சத்தப்படுத்தி நோய்களிலிருந்து விடுவிக்கும்.

நோய் எதிர்ப்புசக்தி பெருக:

வாரம் இருமுறை முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி பெருகி உடல் ஆரோக்கியம் பெரும்.

கண் பார்வை தெளிவுற:

கண் பார்வை மங்கல், பார்வை தெளிவின்மை போன்றவை நீங்க முட்டைக்கோஸின் சாற்றுடன் கேரட் சாற்றை கலந்து உப்பில்லாமல் இருமுறை சாப்பிட்டு வர பார்வை தெளிவாகத் தெரியும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க:

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க முட்டைக்கோஸின் சாற்றை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றின் நோய்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.

மூலநோய்:

மூலநோயினால் துன்பப்படுபவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் மூலநோய் குணமா-கும்.

இரத்த சோகை நீங்க:

இரத்த சோகை நீங்க முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை நீங்கும். இருதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

புற்றுநோயைத் திர்க்க:

வாரம் இருமுறை முட்டைக்கோஸை உணவில் பயன்படுத்தி வந்தால் இதில் இருக்கும் 'மைதையோல்', 'பிளேவனாய்டு' மற்றும் 'இன்டோமல்' என்ற இரசாயனப் பொருடங்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் புற்றுநோய் மற்ற பாகங்களில் வராமல் தடுக்கிறது. இத்தகைய மருத்துவக் குணங்கள் உடைய முட்டைக்கோஸை 'வாழ்நாளை நீட்டிக்கும் உணவு' என்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

திருவோடு - இதுவரை நமக்கு தெரியாத தகவல்..