சொர்க்கத்திலும் வேண்டும் சுதந்திரம் - மாத்தி யோசி
தலைநகரில் பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை பார்த்து ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவன் கணேஷ். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்த கணேஷை பார்ப்பதற்காக ஊராரும், உறவுகளும் கூடினார்கள்.
ஆனால் கணேசுக்கோ தனது பால்ய நண்பர்களை பார்க்க வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் இருந்தது. பெருநகரில் அவன் வாழும் வாழ்க்கை, வாங்கும் சம்பளம் போன்றவற்றை நண்பர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் தனது பெருமையை கேட்டு, தன்னை பாராட்ட வேண்டும் என்பது மட்டுமே கணேசின் எண்ணம்.
அப்படியே தனது சித்தப்பா ஆறுச்சாமியுடன் கரட்டுப்பக்கம் போன கணேஷ், தனது பால்ய நண்பன் கண்ணப்பனை பார்த்தான். கல்உடைத்துக் கொண்டிருந்த இவனை கூப்பிட்டு நலம் விசாரித்து நமது பெருமைகளை சொல்ல வேண்டுமா? இப்படி நினைத்து விட்டு கண்டும் காணாமல் அங்கிருந்து செல்ல முயன்றான் கண்ணப்பன்.
ஆனால் எதேச்சையாக கணேசை பார்த்த கண்ணப்பனுக்கோ ஒரே மகிழ்ச்சி. ‘டேய் கணேசா, என்று கூச்சலிட்ட படியே ஓடி வந்தான் கண்ணப்பன். மாப்ள உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு? எப்படி இருக்கே? ஆர்வத்துடன் கேட்டான் கண்ணப்பன்.
இந்தியாவுல மிகப்பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில நான் வேலை செய்றேன். மாசம் 15ஆயிரம் சம்பளம். 8மணிநேரம் வேலை. எப்பவும் டிப்டாப்பா டிரஸ்போடணும். அதிகாரி சொல்றத, சொன்ன நிமிஷத்துல செஞ்சு முடிக்கணும். தேவையில்லாம வெளியே வரக்கூடாது. அநாவசியமா பேசக் கூடாது. இங்கிலீஷ்ல மட்டும் தான் பேசணும். குறிப்பிட்ட நேரத்தில் உள்ளே போய் கைரேகை பதிவு பண்ணனும். ஏசிக்கு மத்தியில தான் எப்பவும் இருக்கணும்’ அதெல்லாம் ஒரு சொர்க்கம்டா என்று முடித்தான் கணேஷ்.
ஆமா உன்வேலை எப்படி? கேட்டான் கணேஷ்.
‘‘நமக்கு அப்படி ஒண்ணும் பெரியவேலை இல்ல மாப்ள. கண்ணு முழிக்கிற போது வேலைக்கு போன போதும். வியர்வை சிந்தி உழைக்கும் போது, எப்ப பசி எடுத்தாலும் சாப்பிடலாம். யாரும் நமக்கு எந்த உத்தரவும் போடமுடியாது. உழைச்ச உடனே கூலி கிடைக்கும். உறவுகளை எப்பவும் கண்ணுல பார்த்துக்கலாம். அவங்க வீட்டு நல்லது கெட்டதுல பங்கெடுத்துக்கலாம்.
ஒரு நாளைக்கு 500 ரூபா கூலி. உன்னோட வேலைய மாதிரி, என்னோட வேலையும் ஒரு சொர்க்கம் தான். என்ன ஒண்ணு, உன்னுடைய சொர்க்கத்தில் இல்லாத சுதந்திரம் என்னுடைய சொர்க்கத்தில் இருக்கு’’. இப்படி கண்ணப்பன் சொல்லி முடித்த நேரத்தில் கணேசின் தலைக்கு மேல் பறந்து சென்றது ஒரு சிட்டுக்குருவி. சொர்க்கமாக இருந்தாலும் அங்கே சுதந்திரம் வேண்டும் என்பதை கணேசுக்கு உணர்த்த பறந்திருக்குமோ? அந்த சிட்டுக்குருவி.

கருத்துகள்