இடுகைகள்

டிசம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகளின் தேரோட்டம்

படம்
நினைவுகளின் தேரோட்டம் Posted: 30 Dec 2009 07:26 AM PST காகிதக் கப்பல் போல் மறைந்தோடும் எண்ணங்கள்! காவல் தீபத்தையே காத்திடும் ராஜாங்கம்...! முடிந்திட்ட நேரங்காலம் இருளோடு விளையாடும், மொட்டவிழ்ந்த மலர்களெல்லாம் தென்றலோடு கதை பேசும்! காலத்தின் பார்வையிலே கலைந்திட்ட பாதைகள்! நீங்காத வடுக்களினால், சோர்வுற்ற சோகங்கள்!! சோலைக் குயிலோசையில் சூறாவளியின் சுகபயணம்! சூரியக் கிரணங்களாய், என் நினைவுகளின் தேரோட்டம்!!! அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! -சுமஜ்லா. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

படம்
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்... Posted: 29 Dec 2009 04:53 AM PST மனிதர்களின் உண்மை முகங்களை புரிந்து கொள்ள எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் நான் இந்த சச்சரவுகளை நினைக்கிறேன். முதலில், நான் புரிந்து கொண்டது, இங்கு இந்துபெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல; அதே போல இஸ்லாமியப் பெயரில் கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் அல்ல! பத்து பேர் சேர்ந்து ஒரு யானைப்பார்த்து பன்றி என்றால் அது பன்றியாகத்தான் தெரியும்; அது மனிதர்களின் மனப்பான்மை! பர்தா விஷயத்திலும் நிகழ்ந்தது இது தான்! பின்னூட்டத்தில் பொறுமையாக பதில் தந்திருக்கிறேன், ஆனாலும் காதையும் கண்ணையும் பொத்திக் கொண்டு கத்துபவர்களை என்ன செய்ய முடியும்??? பேஜ் இம்ப்ரஷன் அதிகரிக்க, ஒரே நாளில் ஃபேமஸாக என்று எதிர் தாக்குதல் நடத்தி இருப்பார்களோ! எந்தப்புறம் என்றாலும் கொம்பு சீவி விட ஒரு கூட்டம்! ஆனாலும், நான் பொறுமையாகத் தான் பதில் சொல்லி வந்தேன்! முந்திய என் பதிவில் இருக்கும் கவிதையின் உட்கருத்து கூட, பல பதிவர்கள் பல நேரங்களின் எனக்கு அளித்த பின்னூட்டத்தின் விளைவாகத் தான்! அசிங்கமாகத் திட்டி தனிமனிதத் தாக்குதலோடு வந்த ...

குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...

படம்
குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்... Posted: 28 Dec 2009 06:33 AM PST இல்லையொரு பிள்ளையென்று ஏங்கும் போது வந்துதித்த என் செல்லத்தங்கத்துக்கு, பன்னிரெண்டு வருடங்களுக்கு முன், நான் எழுதிய தாலாட்டு! அன்பு எனும் மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் லாஃபிரா கண்ணே தூங்கிடுவாய் தாலேலோ - நீ மனம் நிறைய களிப்புடனே மகிழ்ச்சியுடன் ஆடியபின் தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ(அன்பு எனும்) பூவிதழால் புன்னகைத்து தாய்மனதைக் கொள்ளைகொண்டு பவுர்ணமியாய் ஒளிதருவாய் தாலேலோ - உந்தன் மழலையிலே எனை மயக்க குறும்பினிலே நீ கலக்க நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ! நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ!(அன்பு எனும்) இல்லையொரு பிள்ளையென ஏங்கும் போது வந்துதித்த லாஃபிராகண்ணே கண்மலர்வாய் தாலேலோ - உன் தேன்மொழியில் வாயொழுக தீந்தமிழில் பாட்டிசைக்க திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! (அன்பு எனும்) கையிரண்டில் அள்ளிக் கொண்டு கன்னத்திலே கன்னம் வைத்து முத்தங்களை பொழிந்திடவே தாலேலோ - உன் பொன்னழகை பார்ப்பதற்கும் பூமுகத்தை ரசிப்பதற்கும் கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ! ...

சாது மிரண்டால்...

படம்
சாது மிரண்டால்... Posted: 27 Dec 2009 07:08 AM PST பத்து பேர் சேர்ந்து கூக்குரலிட்டால், பஞ்சு நஞ்சாகிடுமா? வெத்து வேட்டுக்களின் வித்தையிங்கு நஞ்சை விஞ்சிவிடுமா?? இனமானம் காக்க தூக்கிய கூஜா நொருங்கிப் போகுது பாவம்! கூஜாவின் கழுத்தையும் மாதவர் இடுப்பாக காமத்தின் கண்பார்க்கும் சோகம்!! உம்மின ஆண்கூட குடிக்க மாட்டார்களா??? என்று கேள்வி எழுப்பி, தம்வீட்டு பெண்களும் குடிப்பார்கள் என்று பறைசாற்றி, தம்மை, நற்'குடி'யாகக் காட்டிக் கொண்ட தகர டப்பாக்கள்! கருப்பென்று கருவிழியை பிடுங்கி எறிந்து விட்டு, கருப்பென்று தலைமுடி மீசையும் மழித்துவிட்டு, பரிதாபக் கோலத்தில் தன்மானக் காவலர்கள்!! மதிமயக்கும் பானத்தைக் குடித்தாட்டம் போட்டு, விஷம் தோய்த்த பானத்தை விதிமேலே தொடுத்து, மயங்கியொரு போதையிலே முயங்கியாடும் கும்மாளம்! பசுபோட்ட சாணத்தை தலைமேலே ஏற்றி, பெண்ணினத்தின் நாணத்தை காலாலே நசுக்கி, சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் கயவர்களின் பட்டாளம்!! மூடிவைத்த பதார்த்தத்தில் வாசம் வராதென்று, திறந்து வைத்து, தேடிவரும் ஈசலுக்கும், நாடிவரும் எறும்புக்கும் இரையாக்கு...

அரபு சீமையிலே... - 13

படம்
அரபு சீமையிலே... - 13 Posted: 26 Dec 2009 06:40 AM PST மாதவத்தால் வந்துதித்த மாணிக்கமாம் முகமதுவை சாதகமாய் மணமுடிக்க சம்மதத்தை வேண்டியந்த மாதவரும் குடும்பத்திலே பெரியராம் அபுதாலிபிடம், தூதுவிட்டார், துயரம் விட்டார் இனிய நாளில் மணம்முடித்தார். முகமதுக்கு இருபத்தைந்து வயது, கதிஜாவின் வயதோ நாற்பது! இவரை எங்ஙனம் ஏற்பது? என தயங்கவில்லை முகமது! ஏற்றிட மலர்ந்தது கதிஜாவின் முகமது!! ஐநூறு தினார் தங்ககாசும் இருபது பெண் ஒட்டகையும் என மஹர் கொடுத்து மணம்முடித்தார், மனிதர் குல புனிதர் நபி! செவிலித்தாய் ஹலிமாவையும் நன்முறையில் உபசரித்து, பரிசாய் பல கால்நடையும், அன்பளிப்பாய் உவந்தளித்தார். பெண்ணினத்தின் கண்மணியாய், வியனுலக நன்மலராய் ஒருமித்த தாம்பத்யம் - என ஒழுகி நின்றார் கதிஜாவும்!! காஸிம், அப்துல்லாஹ் என்ற இரு ஆண்மக்களும், ஜைனப், ருகையா உம்முகுல்தூம், பாத்திமா, என்று நான்கு பெண்மக்களும், கதிஜாவின் மணிவயிற்றில் உதித்து வந்த கண்மணிகள். ஆண்மக்கள் இருவருமே, இறப்பெய்த சிறுவயதில், பெண்மக்கள் நால்வருமே, சிறப்பாக வாழ்ந்தனரே! விக்கிரக வணக்கமும், வீணான பழக்கமும் ...

பர்தா என்றால் என்ன?

படம்
பர்தா என்றால் என்ன? Posted: 25 Dec 2009 02:38 AM PST இது மதம் சார்ந்த பதிவல்ல! என் மனம் சார்ந்த பதிவு!! பொதுவாக, நான் மதம் சார்ந்த பதிவுகள் எழுதுவதில்லை; காரணம் நான் என் மதத்தை விரும்புவது போல, அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆக, ஜாதி மத வேறு பாடு இல்லாமல், அனைவரும் என் இடுகையைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பொதுவான விஷயங்கள் மட்டுமே எழுதுகிறேன். இந்த இடுகைக்கு என்ன காரணம் என்றால்.... நான் பதிவர் சந்திப்புக்கு பர்தாவுடனே சென்றேன், கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன் என்று எழுதியிருந்ததற்கு, முந்தய பதிவுகளில் மாற்று மத அன்பர் ஒருவர் இவ்வாறு மறுமொழியிட்டிருந்தார், //நான் பேண்ட்டுடனே சென்றேன், கடைசிவரை பேண்ட்டுடனே இருந்தேன்; பெண்கள் புடவையுடனே சென்றார்கள், கடைசிவரை புடவையுடனே இருந்தார்கள், இப்படியெல்லாம் நாங்கள் எழுதினோமா?// இதைப் படித்ததும், எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை! பர்தாவைப் பற்றி பல தவறான கருத்துக்கள் மாற்று மத அன்பர்களிடையே உள்ளது, அதைத் தெளிவாக்குவது தான் இந்த இடுகையின் நோக்கம்! சில கேள்விகளும் பதில்களும்... பர்தா என்றால் என்ன? பர்தா என்பது உடையல...

பதிவர் சந்திப்பில் நான் பேசியவை

படம்
பதிவர் சந்திப்பில் நான் பேசியவை Posted: 23 Dec 2009 06:19 AM PST பதிவர் சந்திப்பில் நான் பேசியவற்றையும் இன்னும் பிறர் பேசியவற்றையும் அழகாக ரெக்கார்டு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நன்றி! அதன் முழு ஒலிநாடாவையும் http://erodetamizh.blogspot.com/ என்ற வலைப்பூவின் மூலமாகக் கேட்கலாம். நான் பேசியவற்றை இந்த லின்க்கை க்ளிக் செய்தால் கேட்கலாம். சுமஜ்லாவின் பேச்சு -சுமஜ்லா. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! கால பாதையில்... Posted: 23 Dec 2009 03:40 AM PST பற்பல திக்கிலிருந்து ஒன்று சேர்ந்தோம், சொற்களால் இதய ரகசியத்தைப் பகுத்தோம்! பொற்கனவை பூட்டி வைத்து புன்னகைத்தோம், கற்பனையில் சிறகில்லாமலே பறந்து திரிந்தோம்! விண்ணோடு விளையாடி களித்திருந்தோம், மண்ணோடு கதைபேசி மகிழ்ந்திருந்தோம்! பொன்னையும் தூசாக மிதித்துவிட்டு, கண்ணாக நன்நட்பை காத்து நின்றோம்! வந்தது வேறு திசையிலிருந்து என்றாலும் சந்தம் சேர்ந்து பாடினோம் கல்விப்பாதையில்! சொந்தம் விலகி பந்தம் மறந்து கைவிட்டாலும் இந்த உறவு என்றும் தொடரும் காலப்பாதையில்!! -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும்...

ஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்

படம்
ஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும் Posted: 21 Dec 2009 09:25 AM PST பதிவர் சந்திப்பில் நிஜமாகவே நான் கலந்து கொள்வேன் என்று சிறிதும் நினைக்கவில்லை. அதற்கு பல காரணங்கள். நேற்று அவசர அவசரமாக சுடச்சுட விவரங்கள் தர வேண்டும் என்று பதிவிட்டதால், சில சுய விவரக் குறிப்புகளைத் தர முடியவில்லை. நான் கொஞ்சம் நாட்களாக பதிவுலகில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை, காரணம் என்னுடைய படிப்பு என்பது என்னுடைய ரெகுலர் வாசகர்களுக்குத் தெரியும். ஒரு நாள் கதிர் சார் அவர்கள், இது குறித்து எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். பிறகு தான் எனக்கு இப்படி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதே தெரிந்தது. அவருக்கு போன் செய்த போது, இடம் இன்னமும் முடிவாகவில்லை, முடிவானபின்பு மெயிலில் தெரிவிப்பதாக சொன்னார். சரி, இது பற்றி எழுதியிருக்கும் இடுகைகளைப் படிக்கலாம் என்று அலசினேன்...! அதில் வாலும், இன்னும் ஒருவரும் எழுதியிருந்த இடுகைகளைப் படித்த போது, 'சிகப்பு கம்பள வரவேற்பு', 'திராட்சை ரசம்' போன்ற வார்த்தைகளைப் படித்து சற்று பின் வாங்கி விட்டேன் என்பது தான் உண்மை! அதனால், அது பற்றி அதிகம் சிரத்தை எடு...

சந்தோஷம் தந்த சந்திப்பு

படம்
சந்தோஷம் தந்த சந்திப்பு Posted: 20 Dec 2009 09:06 AM PST மனம் முழுக்க எதிர்பார்ப்பு! ஏதோ ஒரு சிறு தயக்கம்!! எந்த இடம்...எந்த இடம்...? கண்கள் தேடியபடி நோக்க, தூரத்தில் சிரித்தது பேனர். சர்ரென்று என் ஸ்கூட்டியை கொண்டு நிறுத்தி, பார்த்தால், ஏகப்பட்ட பேர், டீ குடித்தபடி நின்றிருந்தனர். ஆஹா...இத்துணை பேரா? நம்மை தெரிந்து கொள்வார்களா? என்ன மாதிரி வரவேற்பு இருக்கும்??? திக் திக் என்று மனம் அடித்துக் கொண்டது. அதோடு, பெண்கள் யாரையும் காணோம்...கம்பெனிக்கு ஆள் இல்லாமல், நாம் மட்டும் மாட்டிக் கொண்டோமோ? நல்லவேளை என் பர்தாவை வைத்தே அடையாளம் கண்டு விட்டனர். படியேறினால், எல்லாரும் பேட்ஜ் குத்திக் கொண்டு...!மணி அப்போது 4.15. உள்ளே போனால், அங்கு பதிவர் ரம்யாவும், முருக.கவியும் அமர்ந்திருந்தனர். ஆஹா, இரண்டு பெண் வலைஞர்களாவது வந்திருக்கிறார்களே...சந்தோஷமாக அவர்கள் அருகில் போய் அமர்ந்தேன். சரியாக 4.30க்கு பங்ஷன் துவங்கியது. கதிர், வலைச்சரம் சீனா, பழமைபேசி, தமிழ்மணம் காசி, செந்தில், அகநாழிகை வாசுதேவன், பரிசல்காரன், வால்பையன், தண்டோரா, ஆரூரான், க.பாலாசி, கோடீஸ்வரன், வானம்பாடி, நாகா, ஜெர்ரி ஈசானந்த...

சந்தோஷம் தரும் சந்திப்பு

படம்
சந்தோஷம் தரும் சந்திப்பு Posted: 19 Dec 2009 06:05 AM PST எலக்ட்ரான்ஸும் ப்ரோட்டான்ஸுமான மின்காந்த அலைகள் எழுதவில்லை எம்மனங்களின் சங்கமத்தை! அதையும் தாண்டி இருக்கும் எதார்த்த நட்பும், எதிர்பார்ப்பில்லா அன்பும் பின்னிய வலை இது!அகம் மட்டுமே பார்த்த நட்புகள் முகம் பார்க்க ஒரு வாய்ப்பு! எழுத்தின் வடிவத்தை மட்டும் பார்த்தவர்கள் எழில் உருவத்தையும் நோக்கிட ஒரு சந்திப்பு!! ஈரோட்டில் சந்தோஷம் தரும் சந்திப்பாய், ஒரு சங்கமம்!!! சென்னையின் சிறுகதை பட்டறை நடந்த போது, ஒரு ஏக்கமாய் - ஒரு எதிர்பார்ப்பாய் - கைக்கெட்டாத கனியை பார்த்து கொட்டாவி விட்ட கதையாய் ஏங்கியது என் உள்ளம்...கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள் மேல் சற்று பொறாமையாகக் கூட இருந்தது...! அதற்கெல்லாம் ஒரு விடிவாய், இதோ எமக்கொரு வாய்ப்பு!!! நண்பர்கள் அனைவரையும் வருக! வருக! என்று வரவேற்கிறேன்! சந்திப்பு குறித்த விவரங்கள்: 20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3.30 மணிக்குத் துவங்கி மாலை 7...

சாயபு வீட்டு சரித்திரம் - 30

படம்
சாயபு வீட்டு சரித்திரம் - 30 Posted: 11 Dec 2009 06:50 AM PST (உலவும் மனிதர்களின் உண்மை கதை) "சுற்றம் பலப்பல சூழ்கையிலே வெற்றிக்கு அங்கு மாற்றேது?! சற்றும் கலங்கா வாழ்க்கையிலே முற்றும் என்பது கிடையாது!" காத்திருத்தல் ரொம்பவும் கஷ்டம் தான்... ஆனால், சில காத்திருத்தல்கள் சுகமானது, ரசித்து அனுபவிப்பது.... காதலிக்காக காதலன் காத்திருப்பதும், தன் வயிற்றுப் பிள்ளையைக் காண கர்ப்பிணி ஆவலோடு பார்த்திருப்பதும், நாள் குறித்தபின் திருமணத்துக்காகக் காத்திருப்பதும், மொட்டாக இருக்கும் ரோஜா மலர்வதற்காகக் காத்திருப்பதும், புதுமணத் தம்பதிகள் இரவுக்காகக் காத்திருப்பதும்....இப்படி பல காத்திருப்புகள் இனிமையானவை, சுவையானவை, உள்ளத்தோடு உரசி, நெஞ்சத்தோடு கதை பேசுபவை! இங்கேயும் காத்திருந்தாள் பாஜி, எலக்‌ஷன் ரிசல்ட்டுக்காக! எல்லாரும் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.... முடிவு, வெற்றி, வெற்றி, வெற்றி தான்! வாழ்த்து சொல்ல எல்லாரும் அவள் வீட்டுக்கு விரைந்தார்கள். எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினாள். "பாஜிக்கா.... உங்க அக்கா ரெண்டு பேரும் கவர்ன்மெண்ட் சர்வெண்ட் தான்.... ஆனா, கவர...

அப்பா சொன்ன பொய்க்கூ

படம்
அப்பா சொன்ன பொய்க்கூ Posted: 07 Dec 2009 04:12 AM PST எங்க அப்பா காய்கறி விலையேற்றத்தைப் பற்றி ஒரு கவிதை சொன்னார்! (அவருடைய சொந்த கவிதை தான்)! நன்றாக இருந்தது! அதனால், அதை இங்கு தருகிறேன்! கைநிறைய பணம் பைநிறைய காய்கறி அப்போ! கைநிறைய பணம் கைநிறைய காய்கறி இப்போ! - எங்க அப்பா R.J.M. ஹாஜி முகமது இஸ்பஹானி. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!